மொகரம் பண்டிகை அன்று துர்கா சிலைகளை கரைக்க தடைவிதிப்பதன் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் அமைதியை குலைக்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் மேற்கு வங்கத்தில் நீண்ட காலமாக இந்து முஸ்லீம் பண்டிகைகளை ஒற்றுமையுடன்தான் கொண்டாடி வருவதாக கூறியுள்ளார். ஆனால் தற்போது இதனை மம்தாவும், அவரது கட்சியும்தான் பிரச்சினையாக்கி வருவதாக ஷாநவாஸ் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் வகுப்பு கலவரத்தை மம்தா தூண்டுவ தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்துக்களின் துர்கா பூஜையும், முஸ்லீம்களின் மொகரம் பண்டிகையும் 6-ம் தேதி ஒரேநாளில் வருகிறது. இதனையொட்டி துர்கா சிலைகளை கடலில்கரைக்க ஊர்வலமாக செல்வதற்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இந்ததடை உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 6-ம் தேதி இருதரப்பு ஊர்வலமும் நடத்த தனித்தனி பாதையை அனுமதித்து பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply