மேற்குவங்க மாநில பாஜகவின் தேர்தல் அலுவலகத்தை கொல்கத்தாவில் புதன்கிழமை பாஜக தேசியதலைவர் ஜெபி.நட்டா திறந்துவைத்தார்.

மேற்குவங்கத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது, அதற்கான பாஜகவின் மாநிலதேர்தல் அலுவலகத்தை கொல்கத்தாவில் உள்ள ஹேஸ்டிங்ஸில் ஜெ.பி.நட்டா இன்று திறந்துவைத்தார்.

திறப்புவிழாவில் ஜெ.பி.நட்டா பேசுகையில்,

மேற்குவங்க கலாச்சாரத்தை நாங்கள் பாதுகாத்து உயிரோடு வைத்திருப்போம். மேற்குவங்கத்துடன் பாஜக நல்ல உறவை பகிர்ந்துவருகின்றது என கூறினார்.

மேலும் பெண்களுக்கு நடக்கக்கூடிய கொடுமைகள், மனிதகடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியவை மேற்குவங்கத்தில் அதிகளவில் நடக்கின்றது. இதனால் தான் குற்றப் பணியகத்திற்கு தரும் தகவல்களையும் மம்தா நிறுத்தியுள்ளார். கரோனா எண்ணிக்கையை மத்திய அரசிடம் பகிராமல் இருப்பதுகூட அரசியல் ஆதாயங்களுக்காகதான் என விமர்சித்துள்ளார்

திறப்பு விழாவில் மேற்குவங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.