மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலபிரபலங்கள் பாஜகவில் இணைய தொடங்கிவிட்டனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள அரசியல் வாதிகளும் அடங்குவர்.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மிகப் பெரிய உச்சத்தை மேற்குவங்கத்தில் பெற்று வருகிறது. கடந்த  2014 தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்ற பாஜக, இந்தமுறை நடைபெற்றதேர்தலில் 19 இடங்களை பிடித்திருக்கிறது என்பதே சான்று . பாஜக மேற்கு வங்கத்தில் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது.

வங்காள மொழி நடிகர் நடிகையர் 12 பேர் நேற்று பாஜக.,வில் இணைந்தனர். இதில் ரிஷிகவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். மேற்குவங்க பாஜக கவின் தலைவரான திலிப் கோஷ் தலைமையில் நேற்று டெல்லியில் இந்த பிரபலங்கள் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

Comments are closed.