இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை மிகவும் விலை மதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய பிரதமரின் வருகை, இலங்கையில் பாதுகாப்பு நிலவுவதை உலகநாடுகளுக்கு தெரியப் படுத்தியதாக கூறினார். அமெரிக்க படைகள் நாட்டுக்குள் வரும் வகையிலான எந்தவொரு ஒப்பந்தத்தினையும் தான் ஆதரிக்க போவ தில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.