பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளா தாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்துவருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகா பாத்தில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. நிறைவுநாளான நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தொடர்ந்து இருஆண்டுகளாக வறட்சி நிலவியபோதிலும், சர்வ தேசஅளவில் மந்தநிலை ஏற் பட்டபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பொருளா தாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது. முதலீடு களுக்கான ஆதார தடைகள் குறுக்கிட்ட போதிலும் நிதிபற்றாக்குறை 3.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 2015-ல் இந்தியாவில் நேரடி அன்னியமுதலீடுகள் குவிந்துள்ளன.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகரித்தது, வேளாண் மற்றும் சிறுதொழில் களுக்கான லாப கணக்கை உயர்த்தியது ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. இதன்காரணமாக கடைசி காலாண்டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்திவளர்ச்சி (ஜிடிபி) 7.9 சதவீதத்தை எட்டியுள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும். இதேபோல் 2015-16 காலக்கட்டத்தில் நுகர்வோர் செலவழிக்கும் தொகையும் 6.2 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித் துள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply