அதை சொல்வதற்கு முன் எதை எதிர்பார்த்து வோட்டு போடவில்லை என்பதை சொல்லி விடுகிறேன்

1 மோடி என் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவார், நான் உழைக்காமல் வீட்டில் உட்க்கார்ந்துகொண்டிருக்கலாம் என்று எண்ணி வோட்டு போடவில்லை

2 மோடி வெறும் 200 ரூபாயில் கதர் சட்டை, கதர் வெட்டி மட்டும் அணிந்துகொண்டு வளம் வருவார் என்று எதிர்பார்த்து வோட்டு போடவில்லை

3 மோடி வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல், உள்ளூரில் கிராமம் கிராமமாக சென்று தான் ஒரு ஏழை பங்காளி என்று
காண்பித்துக்கொள்ள photo எடுத்து விளம்பரம் தேடிக்கொள்ள வோட்டு போடவில்லை

4 மோடி ஐந்தே ஆண்டுகளில் நாட்டில் இருக்கும் மொத்த கருப்பு பணத்தையும் ஒழித்து விடுவார் என்று மூட நம்பிக்கையில் வோட்டுப்போடவில்லை

5 மோடி தான் எடுக்கும் எல்லா சீர்த்திருத்த முயற்சிகளிலும் முழுமையாக வெற்றிகொண்டு விடுவார் என்ற மூட நம்பிக்கையில் வோட்டு போடவில்லை

6 மோடி இலவசங்களையும் சலுகைகளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பி வோட்டு போடவில்லை

7 மோடி சிறுபான்மையினரின் வோட்டை வாங்க அவர்களுக்கு சலுகைகளை அள்ளி கொடுத்து, அவர்களை உற்சாகமாக எப்பொழுதும் வைத்து கொள்ள, நோம்பு கஞ்சி குடிப்பது, பாதிரியார்களோடு கூட்டமாக அமர்ந்து இந்துக்களை வசைபாடுவதெல்லாம் செய்வார் என்று நம்பி வோட்டு போடவில்லை

8 ஆக மொத்தம் இந்தியா 70 ஆண்டுகளாக சந்தித்து வந்த எல்லா பிரச்சனைகளும் 5 ஆண்டுக்குள் தீர்க்கப்படும் என்று நம்பி வோட்டுப்போடவில்லை

பிறகு எதற்க்காக வோட்டு போட்டேன்?

1 காங்கிரஸ் ஆட்சிகளில் நாளுக்கு நாள் வளர்ந்துவந்த கருப்புப்பணத்தின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.. அதற்கான முயற்சிகள் செய்யப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

2 மோடி எப்படி வேண்டுமானாலும் துணி போடட்டும், ஹெலிகாப்டரில் கூட பயணிக்காட்டும், அதெல்லாம் என் கவலையில்லை.. ஆனால் இந்தியாவின் நன்மதிப்பு உலக நாடுகளுக்கு நடுவில் உயர்த்துவார் என்று நம்பி வோட்டு போட்டேன்

3 மோடி ஆட்சியில் வெளிநாட்டு உறவு மேம்பட வேண்டும்.. பாதுகாப்பு விஷயங்களில் சீனா போன்ற நாடுகள் இந்தியாவை சீண்டுவது, ஆகிராமிப்பது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும்.. அதற்க்கு சீனா எதிரி நாடுகளுடனான உறவை பயப்படாமல் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வோட்டு போட்டேன்

4 உலக அளவின் அனைத்து முக்கிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேம்பட வேண்டும் என்று வோட்டு போட்டேன்

5 மோடி கருப்பு பணத்தை எல்லாவற்றயும் திருப்பிவிடுவார் என்று மூடத்தனமாக நம்பி வோட்டு போடவில்லை, மாறாக கருப்பு பணத்தை மீட்க உண்மையான முயற்சிகளாவது எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்.. அதின் முடிவை பற்றி கவலை படவில்லை

6 வருடா வருடம் குறைந்துகொண்டே வந்த பொருளதார வளர்ச்சி தடுக்கப்பட்டு, திரும்பவும் வளர்ச்சி பாதைக்கு வரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

7 சிறுபான்மையினரை ஓட்டுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அவர்கள் பொருளாதார நிலையில் மாற்றம் கொண்டு வர வோட்டு போட்டேன்

8 இந்தியாவில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை வெறும் 3 % க்கு கீழ்.. இது மாற வேண்டும்.. இவ்வளவு ஆண்டுகளாக வருமானம் இருந்தும் வரி காட்டாமல் டபாய்த்துக்கொண்டிருந்தவர்களை கண்டுபிடித்து வரி வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று வோட்டு போட்டேன்

9 பண வீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

10 செய்யும் ஆட்சியில் வெளிப்படை தன்மை வேண்டுமென்று வோட்டு போட்டேன்.. முன்பு நடந்து வந்த அரசு ஏலங்கள் போல மறைமுகமாக நடக்கலாம், வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று நம்பி வோட்டு போட்டேன்

11 வாஜ்பாய் அரசால் திட்டமிடப்பட்ட நதிகள் இணைப்பு இந்த அரசால் மீண்டும் துவங்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

12 நாட்டின் உலக்கட்டமைப்பு வசதி உயரும் என்று நம்பி வோட்டு போட்டேன்

13 விவசாயிகளின் பிரச்னைகளெல்லாம் தீர உண்மையான முயற்சிகள் எடுக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

14 இந்தியாவில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் , அல்லது அவர்களின் புதிய யோஜனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்று நம்பி வோட்டு போட்டேன்

15 நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்பி வோட்டு போட்டேன்

நான் மேலே சொன்ன காரணங்கள் அனைத்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.. அது தொடர நான் மீண்டும் மோடிக்குதான் போடுவேன்.. அதில் உள்ள சின்ன சின்ன குறைகளை சொல்லி, மீண்டும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமான காங்கிரசுக்கு வோட்டு போட்டால் என்னை விட முட்டாள் யாருமில்லை

#whattsapp share

Leave a Reply