பிரதமர் மோடியால் பலர் வேலை இழந்ததாகக் கூறுகிறார்களே? உண்மையா?

ஆமாம். உண்மைதான்… இதோ வேலை இழந்தவர்களின் பட்டியல்…

1. திருட்டு ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்தவர்கள் வேலை இழப்பு.

2. கறுப்பு பணத்தில் நடத்தப்பட்ட நிறுவங்கள் கணக்கு காட்ட முடியாமல் மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்தவர்கள் வேலை இழப்பு

3. வருமான வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்கள் பாதிப்பு. அங்கு பணிபுரிந்தவர்கள்வேலை இழப்பு

4. உணவுப்பொருள் பதுக்கல் காரர்கள் பாதிப்பு. அவர்களிடம் வேலை செய்தவர்கள் வேலை இழப்பு.

5. GSTயால் இடைத்தரகர்கள் பாதிப்பு. அவர்களிடம் வேலை செய்தவர்கள் வேலை இழப்பு

6. தீவிரவாதிகள் பாதிப்பு. அவர்களுக்கு பொருட்கள் சப்ளை செய்தவர்கள் வேலை இழப்பு

7. போதைப்பொருள் கடத்தல் காரர்கள் பாதிப்பு. அவர்களிடம் பணிபுரிந்த கூரியர்கள் வேலை இழப்பு

8. பிரிவினைவாதிகள் பாதிப்பு. அதனால் கல் எறிபவர்கள் வேலை இழப்பு

9. திருட்டு NGOக்கள் பாதிப்பு. அதனால் மதமாற்ற கும்பல்கள் மற்றும் முட்டுச் சந்து ஊழிய கும்பல்கள் வேலை இழப்பு

10. மின் உற்பத்தி அதிகரிப்பு. அதனால் இன்வெர்ட்டர் கம்பெனிகள் பாதிப்பு. அங்கு பணிபுரிந்தவர்கள் வேலை இழப்பு

11. முத்ரா கடன் திட்டத்தால் கந்துவட்டி காரர்கள் வேலை இழப்பு. அவர்களிடம் பணிபுரிந்த அடியாட்கள் கூட்டம் வேலை இழப்பு

12. NEET தேர்வால் பல ஜகத்ரட்சகர்களும், பால் தினகரன்களும் நடத்தி வந்த தரங்கெட்ட புற்றீசல் மருத்துவ கல்லூரிகள் பாதிப்பு. அங்கு பணிபுரிந்தவர்கள் வேலை இழப்பு

13. தீவிரவாத நிதி சப்ளை பாதிப்பு. நக்சலைட்டுகள் வேலை இழப்பு

14. யூரியாவில் வேப்பம்புண்ணாக்கு கலப்பது கட்டாயம் ஆக்கப்பட்டதால், அதை வேறு கலப்பட வேலைக்கு பயன்படுத்த முடியாமல், கலப்படக்காரர்களும், உர கள்ளச்சந்தை காரர்களும் பாதிப்பு. அவர்களிடம் பணிபுரிந்தவர்கள்
வேலை இழப்பு

15. நிரவ் மோடி, மல்லையாக்கள் பிடிபட்டதால் அவர்களுடைய நிறுவனங்களில் பணிபுரிந்த லட்சக்கணக்கானோர் வேலை இழப்பு

16. ஏழைகள் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கொண்டு இருந்தபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மூட்டை மூட்டையாக பணத்தை குப்பை தொட்டியில் வீசி எறிந்த பரம ஏழைகளின் அதி நேர்மையான தொழில் பாதிப்பு

இன்னும் சொல்லி கொண்டே போகலாம். ஆகமொத்தம் திருட்டு பசங்களுக்கும், அவர்களிடம் பணி புரிந்தவர்களுக்கும் வேலை இழப்பு.

நன்றி: Ananthan Mohan

Leave a Reply