ஆங் மோடியா பருப்பு விலையை குறைச்சார் அது ஏனோதானா குறைஞ்சிடுச்சு என சொல்லும் ஆட்களுக்கு பதில்.

முன்னாடி மாசம் ஆனா இந்தமாதம் பொதுவிநியோக திட்டத்திற்கு அதாங்க ரேஷன் இவ்வளவு கோதுமை, இவ்வளவு ஆயிரம் டன் பருப்பு மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என கடிதாசி எல்லா மாநில முதல்வர்களும் எழுதுவாங்களே 2014க்கு அப்புறம் அந்த பிரச்சினையே இல்லாம இருக்கே அது எப்படி?

அதே மாதிரி இந்த உரப்பிரச்சினை, உரத்தட்டுப்பாடு இவ்வளவு உரம் கிடைக்கவில்லை என மாசம் ஒன்னாம் தேதி ஆனா கூப்பாடு போட்டுட்டு இருந்தாங்களே ஏன் இப்போ அது இல்லை?

இந்திய உணவுப்பொருள் கழகத்தின் கிடங்குகளிலே வீணாகும் அரிசி, கோதுமையை ஏழைகளுக்கு கொடுக்கலாமே என உச்சநீதிமன்றமே சொன்னபோது அதெல்லாம் முடியாது என அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே ஞாபகம் இருக்கா சோ கால்டு ஏழைப்பங்களாளர்களே?

விவசாயிகள் உழைச்சு விளைவிச்ச அரிசி, கோதுமை, பருப்பு எல்லாம் இந்திய உணவுபொருள் கழகத்திலே உளுத்துபுளுத்து வீணானது பற்றிய தகவல்கள் இப்போ ஏதும் வருதா?

இந்த மக்களுக்கான உணவுப்பாதுகாப்பு என்பது சாராயம் காய்ச்சும் சமாச்சாரம் இல்ல. கிடைச்சது எல்லாத்தையும் போட்டு காய்ச்சுவோம் அப்படீன்றதுக்கு. இந்த டேனியல் ரொம்ப கூவுச்சே இந்த மாதிரி ரேஷன் கடைகளை மூடப்போறாங்கன்னு அது ஏன்னுதெரியுமா?

இதைப்பத்தி எல்லாம் முன்பே எழுதியிருந்தேன்.

மோடி இந்த உற்பத்திக்கு விநியோகத்திற்கும் இடைவெளியை குறைத்தார், நிர்வாகத்தை சீர்படுத்தினார், ஊழலைஒழித்தார். விளைவு எல்லாம் ஒழுங்காக நடைபெறுகிறது.

1. உர ஆலைகளுக்கு உரம் உற்பத்தி தேவையான நாப்தா போன்ற பெட்ரோலிய பொருட்கள் சரியாக கிடைக்க வழி செய்தார். யூரியாவுக்கு தேவையான அம்மோனியா எனும் பொருள் பெட்ரோலிய பொருட்களில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகீறது.

2. உற்பத்தியான உரத்தை இடைத்தரகர்கள் கொள்ளையடிக்காமல் விவசாயிகளுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்தார். இப்போது உர டீலர்களுமே எவ்வளவு டன் உரம் எத்தினிவிவசாயிகள் வாங்கினார்கள் என கணக்கு காட்டவேண்டும். ஆதார் கார்டு வைத்தே விவசாயிகள் உரம் வாங்க முடியும்.

3. சிறு குறு விவசாயிகளுக்கு சிறு கடன் திட்டம் அதுவும் டெபிட் கார்டு வழியாகவே பணம் எடுத்துக்கொள்ளும் வசதி, பயிர்காப்பீடு, மண்பரிசோதனை என ஏகப்பட்ட திட்டங்கள். விளைவு கடந்த பத்தாண்டுகளிலே இல்லாத அளவுக்கு விளைச்சல், உற்பத்தி.

4. விளைந்த பொருட்களை விற்க தனியார் வசம் இருந்த கமிஷன் மண்டிகள் பிஜேபி ஆளும் மாநில அரசுகளால் ஒழிக்கப்பட்டது. விவசாயிகள் நேரடியாகவே பொருட்களை விற்க வழி செய்யப்பட்டது. இந்திய உணவுப்பொருள் கழகம் கொள்முதல் செய்யும் அரிசி, பருப்பு,கோதுமை எல்லாம் ஒழுங்காக கனக்கெடுப்பட்டு பாதுகாப்பட்டன.

5. அடுத்து விநியோகம். பொதுவிநியோக திட்டத்தின் கீழே போலி ரேஷன் கார்டு வைத்து பொருட்களை திருடி அதைபதுக்கி சந்தையிலே அதிக விலைக்கு விற்று வந்தவர்களுக்கு கடப்பாரை சொருகப்பட்டது. ஆதாரை இணைத்ததன் பலபத்து கோடி போலி ரேஷன்கார்டுகள், போலி பயனாளர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டார்கள். அரசு சேமித்தது கிட்டத்தட்ட ஒருலட்சம் கோடி. வேலை செய்யும் அதிகாரிகளிலே இருந்து எடுத்துப்போகும் லாரிகள், இருக்கும் கிடங்குகள் எல்லாம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கணினி மூலம் கணக்கெடுக்கப்பட்டு கண்கானிக்கப்பட்டன. தினம் எவ்வளவு வாங்கப்படுகீறது என இருந்து எங்கே எவ்வளவுபொருள் இருக்கீறது, யார் வாங்கினார்கள் என்பது வரை சொல்லமுடியும். ரேஷன் கடைகளுக்கே டிஜிட்டல் பணம் செலுத்தும் வசதி வந்ததன் மூலம் இன்னும் அதிக கணக்கெடுத்தல் கொண்டு வரப்பட்டது.

6. தேவையான பொருட்களை வெளிநாட்டிலே விளைவிக்கவும் இறக்குமதி செய்யவும் மோடி அரசு பலதிட்டங்களை போட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி ஊழல் ஞாபகம் இருக்கீறதா? தேங்காய் எண்னெய் தீடீர்குபீரென விலை ஏறியது, நல்லெண்ணய் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏறியது எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? அது எப்படி தடுக்கப்பட்டது என்றால் உள்நாட்டிலே தேவை இருக்கும்போது வெளிநாட்டுக்கு குறைந்தவிலைக்கு ஏற்றுமதி செய்யும் முறை தடுக்கப்பட்டது. இதுவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தினமும் கணக்காணிக்கும் அளவுக்கு உள்ளது. அதாவது விலை ஏறி ஆறுமாதம் கழித்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என இல்லை. விலை ஏறுமா என பார்த்தே நடவடிக்கை எடுக்க முடியும். பிரதமரின் நேரடி கண்கானிப்பில் கீழே இயங்கும் குழுக்களிலே இதுவும் ஒன்றும். கறுப்புபண நடவடிக்கை ஒழிப்பு மற்றும் ரெவின்யூ இண்டலிஜென்ஸ் குழுக்களோடு இது இணைந்து செயல்படுகிறது. அதாவது பதுக்கல் கோஷ்டிகளுக்கும் கருப்புபண முதலைகளுக்கும் எப்படியும் சம்பந்தம் இருக்கும் ஒருஆளை பிடிச்சா இன்னோர் ஆளையும் பிடிச்சிடலாம்.

7. போக்குவரத்தை சீர்செய்ததும் இன்னோர் முக்கிய வேலை. ரயில்வே வண்டிகள் இல்லாமல் பொருள்கள் தேங்கின என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. கூடவே சாலைவசதிகள் இன்னபிற எல்லாம் மேம்படுத்தப்பட்டன.

8. நீர்மேலாண்மையிலே குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டங்களையும் மோடி அரசும் பாஜக ஆளும் மாநிலங்களும் செயல்படுத்திவருகிறது. மகாராஷ்டிராவிலே வறட்சி கிராமங்களிலே குளங்களையும் குட்டைகளையும் வெட்டியதன் மூலம் தண்னீர்ப் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிற்று. வெள்ளம் வந்து நாசமாக்கும் பகுதிகளுக்கு புதிய அணைகள் கட்ட திட்டமும் கால்வாய்கள் வெகு விரைவாக கட்டப்படுகின்றன.

Leave a Reply