தேர்வுகளை வெற்றி கரமாக எதிர்கொள்வது எப்படி என, மாணவர்களுக்கு ஆலோசனைகூறும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி எழுதிய, 'எக்ஸாம் வாரியர்ஸ்' என்ற புத்தகம், நேற்று வெளியிடப் பட்டது.

மோடி, பிரதமராக பதவியேற்ற பின், மாதந்தோறும், 'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.குறிப்பாக, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆலோசனை கூறினார். இதற்கு, மாணவர்கள் மத்தியில் பெரும்வரவேற்பு கிடைத்தது.

கடந்தாண்டு பிப்ரவரியில், மாணவர்கள், பொதுத்தேர்வு சமயத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், மன அழுத்தத்தை தவிர்ப்பது ஆகியவை பற்றியும் உரையாற்றினார்

பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதும்,பிரதமரின் ஆலோசனையால், தாங்கள் பயனடைந்ததாக, ஏராளமான மாணவர்கள், பிரதமருக்கு கடிதம் எழுதினர்.இதையடுத்து, மாணவர்களின் நலனைகருதி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரைகளுடன், தன்வாழ்வில் சந்தித்த நிகழ்வுகள் மற்றும் அதற்கான தீர்வுகள், முக்கிய தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை, எளிய நடையில் புத்தகமாக எழுதத்துவங்கினார்.

பிரதமர் மோடி, 'எக்சாம் வாரியர்ஸ்' என்றபெயரில், ஆங்கிலத்தில் எழுதிய இந்த புத்தகத்தை, டில்லியில் உள்ள, 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' பதிப்பகம் அச்சிட்டது. நேற்று, டில்லியில் நடந்தநிகழ்ச்சியில், வெளியுறவுதுறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த புத்தகம், 208 பக்கங்கள் உடையது. இதன்விலை, 100 ரூபாய். இதை, ஆன்லைனில், 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற வர்த்தக இணையதளங்களில் வாங்கலாம். பதிவு செய்த இருநாட்களில், நம் கைக்கு புத்தகம் வந்துவிடும். இந்த இணையதளங்களில், 5 சதவீத தள்ளுபடி வழங்கப் படுவதால், ஒரு புத்தகத்தின் விலை, 95 ரூபாய் மட்டுமே. 'கேஷ் ஆன் டெலிவரி, கார்டு பேமென்ட்' வசதியும் உள்ளது.

Leave a Reply