பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகைக்குப் பின்னர் தமிழகத்தில் பாஜக புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது.
 கேரள மாநிலம், கொச்சிக்கு பாஜக தலைவர் அமித்ஷா வியாழக் கிழமை (பிப்.4) வருகிறார். அங்கு, கேரளம், தமிழக பா.ஜ.க தலைவர்களை அவர் சந்தித்து, தேர்தல்குறித்து ஆலோசனை நடத்துகிறார். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முக்கியமுடிவு எடுக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பாஜக சிறியகட்சி என்றால், பாமக கூட்டணிக்கு அழைப்பது ஏன்? கடந்த மக்களவைத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட, தற்போது பாஜகவின் வாக்கு வங்கி கூடியுள்ளது.  மத்திய அரசு சாதனையை விளக்கவும், கட்சியை பலப்படுத்தவும் தமிழகத்தில் ரதயாத்திரை நடத்தப்படும். மாநாடுகளும் நடத்தப்படவுள்ளது.

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜகவின் ஊழியர்கள் கூட்டம், புதன்கிழமை காமராஜர் சாலை காந்தி பொட்டல் பகுதியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர், மாநிலப் பொதுச் செயலர் எஸ். மோகன் ராஜுலு செய்தியாளர்களிடம் கூறியது

Leave a Reply