நீண்ட நாளாக குற்றவாளிகளின் கையில்தான் சமுதாயம் இருக்கிறது! பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துவோர் குற்றவாளிகள்! ஊடகங்களை நடத்துவோர் குற்றவாளிகள்! சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்போர் குற்றவாளிகள், மருத்துவமனைகளை பெரிய அளவில் நடத்துவோர் குற்றவாளிகள்! அரசியலில் இருப்போர் பெரும்பாலும் குற்றவாளிகள்!

 

     கிருமினல் குற்றங்கள் செய்தவர்கள் என்று நான் சொல்லவில்லை! அப்படியும் சிலர் இருக்கலாம்! அந்த விவரங்கள் எனக்கு தெரியாது! ஆனால் எல்லோருமே வரி ஏய்ப்பு செய்யும் குற்றவாளிகளே! கறுப்புப்பணத்தை கையாளும் குற்றவாளிகளே! கள்ள வியாபாரம் செய்யும் குற்றவாளிகளே, கடத்தல் வியாபாரத்தை ஆதரிக்கும் குற்றவாளிகளே, கவாலா பண பரிவர்த்தனை குற்றவாளிகள், பினாமி சொத்து குற்றவாளிகள்! இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்!

 

    இத்தகைய குற்றவாளிகள் தொடர்ந்து செயல்படுவதால்தான், இவர்களுக்கு அரசியல்வாதிகளின் துணையும் உதவியும் பங்களிப்பும் கிடைப்பதால்தான் ஏழைகளால் முன்னேற முடியவில்லை! சானானியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை! ஏழைகள் ஏழையாகவே இருக்கிறார்கள்! பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்!

 

     இத்தகைய நிலையை மாற்றவேண்டும் என்று குரல்கொடுத்து பேசக்கூடிய அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் எழுத்தாளர்கள் போன்றோரும்கூட ஒரு கட்டத்தில் இந்த குற்றவாளி கூட்டணியில் சேர்ந்துவிடுகிறார்கள்! பணம் பத்தும் செய்யும் என்பார்களே அதில் ஒன்றுதான் இது! விலைக்கு வாங்கப்படும் இந்த எழுத்தாளர்களும் பத்திரிக்கையாளர்களும், மக்களுக்கு நல்லது செய்வதுபோல் பேசுவார்கள்! ஏழை மக்களிடம் ஒரு ஆதரவான ஒரு போக்கினை காட்டிவிட்டு, கள்ளப்பணக்கார்ர்களுக்கு ஆதரவாகவே நடந்துக்கொள்வார்கள்! வெளியில் பேசுவதற்கும் நிஜத்தில் நடந்துக்கொள்வதற்கும் சம்மந்தமே இருக்காது! ஏழை மக்களால் இதை புரிந்துக்கொள்ளமுடியாது! மொத்தத்தில் இந்த குற்றவாளிகள் ஏழைகளை ஏய்த்துக்கொண்டே இருக்கிறார்கள்!

 

      பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ஒரு அவதார புருசரைப்போல வலுவானவர்! அவர் ஒருவர்தான் இந்த குற்றவாளிகளுக்கு எதிராக போர் தொடுத்துள்ளார்! ஏழை மக்களின் ஆதரவோடு அவர் இதை செய்கிறார்! ஆனால் குற்றவாளிகள் ஏழை மக்களைக்காட்டிலும் பிரதமரைக்காட்டிலும் பலசாலிகள்! இப்போது குற்றவாளிகள் அனைவரும் ஓரணியில் இணைந்து பிரதமரையும் ஏழைகளையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள்! அதற்காக அப்பட்டமான பொய்களை ஏழைகளிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்!

 

     மூலப்பொருள் வரி, தயாரிப்புப்பொருள்வரி, மொத்த வியாபார வரி, சில்லரை வியாபார வரி, மதிப்புக்கூட்டு வரி, கூடுதல் மதிப்புக்கூட்டு வரி, நுழைவு வரி, கூடுதல் நுழைவு வரி, சுங்க வரி, மாநிலங்களுக்கு இடையிலான வரி என்றெல்லாம் பலவரிகளும் சுங்கச்சாவடிகளில் காத்துக்கிடந்து லஞ்சம் கொடுக்கவேண்டிய சூழ்நிலைகளும் இருந்த வரிவிதிப்பு நிலைகளை ஒழித்துத்தள்ளி ஒரே வரி என முந்தைய வரியைக்காட்டிலும் இரண்டு சதவிகிதத்திலிருந்து பத்து சதவிகிதம் வரை வரியை குறைத்து, சில பொருட்களுக்கு வரியே இல்லை எனவும் அறிவித்து, கொண்டு வரப்பட்ட ஒரே வரியான சேவை மற்றும் சரக்கு வரியை மக்களுக்கு எதிரானது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்! குறைவான ஒன்று எப்படி எதிரானதாக இருக்கமுடியும்?

 

     இந்த சரக்கு மற்றும் சேவை வரி குறைவானதுதான்! ஆனால் இதன்படி வரி ஏய்ப்பு செய்யமுடியாது! வருடம் 20 லட்சத்திற்கு மேல் வியாபாரமோ உற்பத்தியோ செய்பவர்கள் கண்டிப்பாக பில் போடவேண்டும்! வரி செலுத்தவேண்டும்! இது வரை இவர்கள் யாரும் முறையாக வரி செலுத்தியவர்கள் இல்லை! செய்வது எல்லாம் கள்ளவியாபாரமே! பில் போட மாட்டார்கள் போட்டாலும் அரசாங்கத்திடம் காட்டமாட்டார்கள்! கடத்தல் பொருட்களையும் டூப்பிளிக்கேட் பொருட்களையும் விற்பவர்கள் எப்படி பில்போட்டு வரி செலுத்தவார்கள்?

 

      எனவே விலையை கூட்டி வைத்து மோடி செய்த சீர்திருத்தத்தால் தான் விலை ஏறிவிட்டது என்று பொய்யை சொல்லி மக்களை மோடியிடமிருந்து பிரிக்க பார்க்கிறார்கள்! ஏற்கெனவே அந்த பொருளுக்கு இருந்த வரிகளை குறைத்துவிட்டுதான் புது வரியை கூட்ட வேண்டும்!

 

     அப்படி குறைத்து கூட்டினால், குறைப்பது அதிகமாகவும் கூட்டுவது குறைவாகவும் இருக்கும்! எனவே குறைவாகத்தான் விற்கவேண்டும்! ஆனால் இவ்வளவு நாளும் வரிஏய்ப்பு செய்துக்கொண்டிருந்த நம்மை வரிகட்ட வைத்துவிட்டார்களே என்னும் கோபத்தில்,டூப்ளிக்கேட் பில்லில் விருப்பம்போல் விலையேற்றி விருப்பப்படி வரி போட்டு விற்கிறார்கள், அந்த பில்லில் உள்ள வரியை அவர்கள் அரசிடம் கட்டுவதும் இல்லை! லட்சம் ரூபாய்க்கு பில் போட்டால் இரண்டாயிரத்திற்கு வரி கட்டுவார்கள்! பெரும்பாலான வியாபாரிகள் சற்றும் சமுதாய அக்கரை இல்லாமல் தொடர்ந்து குற்றவாளிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள்!  

 

     ஏழைகளுக்கு உதவ ஒருவர் வந்து விட்டாரே இவர் இருக்கும் வரை நாம் எப்படி ஏழைகளை ஏய்த்து பிழைக்கமுடியும்? என்பதுதான் இவர்களின் கேள்வி! கள்ளப்பணம் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு மற்றும் ஒரே வரி பிரச்சனையால் மகராஸ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியும் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறது! இந்தியாவில் அரசியல் என்றாலே கொள்ளையடிப்பதுதான்! பாஜக வும் இந்த நிலையில்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்!

 

    பாஜக ஊழலை ஒழிப்பது குற்றவாளிகளை ஒடுக்குவது என்னும் கொள்கையில் உறுதியாக இருப்பதால் குற்றவாளிகள் எல்லோரும் ஒரு அணியில் சேருகிறார்கள்! மக்களை குழப்புகிறார்கள்! மோடி மட்டும்தான் மக்களின் நன்பன் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்!

 

     500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொன்னதில் ஏழைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! கள்ளப் பணக்காரர்களுக்குத்தான் பிரச்சனை! இப்போது கள்ளப்பணக்காரர்கள், ஏழைகளுக்குதான் பிரச்சனை எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று முதலை கன்ணீர் வடிக்கிறார்கள்!

 

     கள்ளப்பணக்காரர்களும்கூட ஏழைகளின் உதவியோடு வங்கிகளில் மாற்றி சிலர் ஓரளவு தப்பித்திருக்கலாம்! அதுவும் ஏழைகளின் கைகால்களை பிடித்து தப்பியிருக்கலாம்! பெரும்பாலான கள்ளப்பணக்காரர்கள் மாட்டிக்கொண்டது உண்மை!  12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வங்கிக்கு வராமல் வெளியிலேயே அழிக்கப்பட்டுள்ளது!

 

     சூடு பட்ட புலியாக இப்போது குற்றவாளிகள் துடிக்கிறார்கள்! ஏழைமக்கள் மோடியின் பக்கம் உறுதியாக இருந்தால்தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்!

நன்றி ;குமரிகிருஷ்ணன்

Leave a Reply