தமிழகம் தீவிரவாதிகளின் பிரிவினைவாதிகளின் கோட்டையாக மாறியுள்ளது என்பதை பொன்னார் தெரிவிப்பதற்கு முன்னரே பல சமூக ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இன்றைக்கு மோடியை எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் வரியை ஒழுங்காக கட்டாதவர்கள், அரசை ஏமாற்றுபவர்கள், தீவிரவாதிகளின் பிரியாணிக்காக வாழுபவர்கள், பிரிவினைவாதிகளுடன் கைகோர்த்தவர்கள், கிரிமினல் செயலை செய்பவர்கள் மற்றும் ஆட்சியில் பொறுப்பில் இருக்கும் போது மக்கள் சொத்தை அபகரித்தவர்கள் தான்.

இந்த சின்னதிரை ஊடகங்கள் பத்திரிக்கைகள் மக்களிடம் அரசுக்கு எதிரான கருத்தை பரப்பி தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதிகளை மக்களுடன் ஒன்றோடு ஒன்றாக கலக்க வைத்து அதன் மூலம் தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றன. தமிழக ஊடகங்கள் பொய்த்தகவலை பரப்பி பாஜக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளன.

ஊடகங்கள் தவறான தகவலை பரப்பியதன் மூலம் தமிழக மக்கள் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. உதாரணமாக

1. திமுக காங்கிரசால் தடைவிதிக்கப்பட்ட ஜல்லிகட்டு மீண்டும் தமிழகத்திற்கு மத்திய பாஜக பெற்றுத்தந்தது.

2. திமுக காங்கிரசின் சதியால் காவேரியில் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய உரிமை தடைபட்டது. ஆனால் மத்திய பாஜக அரசு கர்நாடகாவில் தேர்தல் முடிந்து தனக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜக கர்நாடகத்தில் ஆட்சி அமைத்து அதன் விளைவாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா சார்பாக ஆஜராக புதிய வழக்கறிஞரை நியமித்து காவேரி பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தில் முடிவை எட்டவைத்து அதன் மூலம் காவேரி ஆணையம் உருவாக்கப்பட்டு காவேரி தண்ணீர் உரிய நேரத்தில் மத்திய பாஜக பெற்று தந்தது.

3. நீட் தேர்வு மூலம் ஏழை மக்கள் மருத்துவகல்வியை பயில மத்திய பாஜக பேருதவிபுரிந்தது.

4. AIIMS மருத்துவமனைை கொண்டுவந்தது

5. விவசாயத்திற்கு காப்பீடு

6. தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக விவசாய பொருட்கள் மிகத்ரிதமாக எடுத்து செல்ல ஏதுவாக Infrastructure முழுமையாக செய்யப்பட்டு வருகிறது.

7. வருடத்திற்கு ரூ 12/- கட்டணத்தில் காப்பீடு

8. கேஸ் மானியம் வங்கி மூலம் வழங்கப்பட்டதால் மற்றும் கேஸ் மானியத்தை பலர் விட்டு கொடுத்ததன் விளைவாக ரூ 50000 கோடி அளவுக்கு மிச்சமாகி அதை கொண்டு பல ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.

9. பண மதிப்பிழக்க நடவடிக்கை மூலம் காஷ்மீரில் தீவிரவாதம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

10. GST மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் முறை கொண்டுவரப்பட்டது.

11. முத்தலாக்கை ஒழித்து முஸ்லீம் பெண்களுக்கு சுதந்திரத்தை பெற்று கொடுத்துள்ளார்.

12. இலங்கையில் போர் நடந்த பகுதிகளை புணரமைத்து இலங்கை தமிழர்களுக்கு உதவி புரிந்துள்ளார்.

13. வெளிநாட்டில் காங்கிரஸ் காலத்தில் வாங்கிய கடன்களை அடைத்துள்ளார்.

14. காங்கிரஸ் காலத்தில் கடன் கொடுத்து மல்லையா வெளிநாடு தப்பி சென்றார். மோடி அரசாங்கம் மல்லையா சொத்துகளை ஏலம் விட்டு அவர் நமது வங்கியில் ஏமாற்றி பெற்ற கடனைஅடைத்து வருகிறது.

15. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விற்பனை செய்ய பாதுகாத்து வைக்க தனியாக வளைத்தளம் மோடி அரசு உருவாக்கியுள்ளது.

இப்படி எண்ணற்ற மக்கள் நல சேவைகளை மோடி செய்துள்ளார்.

இந்தியர்களின் வாழ்வு சிறக்க மோடி அரசாங்கம் மீண்டும் தொடர வருகிற 2019 ஆண்டு பொது தேர்தலில் மோடிக்கு ஆதரவாக தமிழகம் பாண்டிச்சேரியிலிருந்து 40 சீட்களை மோடிக்கே வழங்கி நமக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை மோடியிடம் கேட்டு பெறுவோம்.

Leave a Reply