மே.,23-ல் பிறந்த உ.பி., மாநில குழந்தைக்கு நரேந்திரமோடி என பெயரிட்டுள்ளனர் முஸ்லிம் தம்பதியினர்.

 

உ.பி., மாநிலம் கோண்டா அருகே உள்ள வாசிர் கன்ஜ் பகுதியை சேர்ந்தவர் மேனஜ்பேகம். இவரது கணவர் முஸ்டாக் அகமது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இந்த தம்பதியினருக்கு தேர்தல்முடிவு வெளியான 23-ம் தேதி ஆண்குழந்தை பிறந்தது. பிரதமராக யார் வந்துள்ளார் என மனைவியிடம் கேட்டார். அப்போது அவர் நரேந்திர மோடி வெற்றிபெற்றுள்ளார் என மேஜன் பேகம் தெரிவித்துள்ளார்.

உடனே தம்பதிகள் குழந்தைக்கு நரேந்திரமோடி என பெயர் சூட்டுவது என்று முடிவு செய்தனர். இதற்கு மேனஜ் பேகமின் மாமனார் மொகமத் இத்ரிஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அது அவர்களின் குடும்பவிசயம். மற்றவர்கள் அதில் தலையிடமுடியாது என்றும் கூறினார். இதனையடுத்து குழந்தையின் பெயர் நரேந்திர தமர் தாஸ் மோடி என பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து குழந்தையின் தாய்  கூறுகையில், மோடியை போன்று எனது மகன் வெற்றி கரமானவராக இருக்க வேண்டும். என விரும்புகிறேன் என்றார்.

Comments are closed.