நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோகவெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. எனினும் தமிழகத்தில் அக்கூட்டணியால் சோபிக்க முடியவில்லை. இதற்கு தமிழகத்தில் நிலவிய மோடி எதிர்ப்பலையே காரணம் என்று அதிமுகவின் அதிகார பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ கூறியிருந்தது .

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துநின்று 37 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக, இம்முறை ஒரேயொரு இடத்தைமட்டுமே வென்றது.

Comments are closed.