தினத்தந்தி நாளிதழின் பவள விழா மற்றும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவரது பயணதிட்டத்தில் இடம்பெறாத நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “சென்னை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததில் அரசியல் எதுவுமில்லை.

2ஜி வழக்கின் தீர்ப்பு 10 ஆயிரம் பக்கங்களுக்குமேல் இருக்கும் என்பதால் அதை எழுதிமுடிக்க கால அவகாசம் தேவைப்படும். எனவே, தீர்ப்பு தேதி அறிவிப்பதை தள்ளிவைத்தது வழக்கமானதுதான். தீர்ப்பு ஆ.ராசாவுக்கு எதிராகவந்தால் அவர் மேல் முறையீடு செய்வார். எங்களுக்கு பாதகமாக வந்தால் நாங்கள்செல்வோம்.

பிரதமர் நரேந்திர மோடியை நான் நன்கு அறிவேன். காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூருடன் பழகினாலும் அவரது வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடமாட்டார். அதுபோல திமுக தலைவர் கருணா நிதியை சந்தித்ததால் 2ஜி வழக்கிலும் தலையிடமாட்டார். அதனால் இதுகுறித்து எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.

Tags:

Leave a Reply