பிரதமர் நரேந்திரமோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் சந்தித்தது திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணி களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது என்று திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4-ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது.

இந்த மாபெரும் ரெய்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தினகரன் தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சுய அதிகாரம்பெற்ற வருமான வரி துறையினரின் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்றமாநிலங்களில் பாஜக.,வினரின் நிறுவனங்களில் கூட வருமான வரித் துறை சோதனை நடத்தியுள்ளது.

உணவுப் பொருட்கள், ஹோட்டல் உணவுகளுக்கு ஜிஎஸ்டி பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. இன்னும் சிலமாதங்களில் ஜிஎஸ்டி வரியின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள். சென்னைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்ததில் திமுக கூட்டணியில் உள்ள சில ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply