வரும் 8- ம் தேதி கர்நாடக மாநிலம், பிஜாப்பூரில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளவுள்ள பிரசாரப் பொதுக்கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என தில்லி சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.


தில்லி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா சில தினங்களாக கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் தேர்தல்பணிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். 


இந்நிலையில், பிஜாப்பூர் மாநிலத்தில் வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ள இடத்தை வெள்ளிக்கிழமை அவர் பார்வையிட்டார்.இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் மிகப்பலமான மோடி அலை வீசுவதை உணர முடிகிறது. பிஜாப்பூரில் பிரதமர்மோடி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஆயிர கணக்கான தொண்டர்கள் உழைக்கிறார்கள். 


இவர்களின் உற்சாகத்தைப் பார்க்கும் போது இக்கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply