ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள் என்று பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழநெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் மேடையில்பேசிய சிவாஜிலிங்கம், காவிரிக்காக தமிழகமக்கள் குரல் கொடுப்பதை போன்று ஈழத் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் குரல்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய கவிஞர் காசி ஆனந்தன், சிங்களர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் ஆட்சியாளர்களை மாற்றுவது தொடர்பானது என்றும் தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இலங்கையின் அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பானது என்றும் கூறினார்.

பின்னர் பேசிய அண்ணாமலை, கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன் பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியப் படுத்தாமல் மறைமுகமாக ரத்து செய்து விட்டதாக சாடினார். கச்சத்தீவு யாரிடம் உள்ளது என்பது முக்கிய மில்லை என்றும் கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் மீன்பிடிப்பதற்கு ஏதுவாக சட்டப்பிரிவு 6-ஐ அரசியலமைப்பில் சேர்க்கவேண்டும் என்றும் கூறினார். மேலும், தனிஈழம் உருவாக்கப்பட்டால் உலகத்தில் சிறியநாடாக அதுதான் இருக்கும் என்று கூறிய அண்ணாமலை, இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கிற ஒரே மனிதர் நரேந்திர மோடிதான் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Comments are closed.