மோடி மீண்டும் பிரதமர் ஆகா விட்டால் தாம் தற்கொலை செய்து கொள்வதாக உத்தர பிரதேச ஷியா வக்ஃபு வாரிய  தலைவர் வசீம் ரிஜ்வீ அறிவித்துள்ளார்.

இது குறித்து, உ.பி.,யில் செய்தியாளர்களிடம் வசீம் ரிஜ்வீ  நேற்று கூறியதாவது: தேசம் என்பது அனைத்து மதங்களையும்விட உயர்ந்தது. தேசியநலன் தொடர்பாக நான் எப்போது பேசினாலும், பிற்போக்கான முஸ்லிம்கள் என்னை கொன்றுவிடுவதாக மிரட்டுகின்றனர்.

பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், எனது தலையை கொய்து விடுவதாக அவர்கள் கூறிவருகின்றனர். மோடி மீது நம் நாட்டு மக்கள் அன்பு செலுத்துகின்றனர்.

இதுதொடர்பான அச்சம், தேசத் துரோகிகள் இடையே நிலவுகிறது. நம் நாட்டின் திறமை வாய்ந்த பிரதமராக மோடி உள்ளார். எனவே, அவர் மீண்டும் பிரதமராகாமல், வேறுகட்சியின் தலைவர் அப்பதவியில் அமர்ந்தால், நான் அயோத்தியின் ராமர்கோயில் வாசலில் தற்கொலை செய்து கொள்வேன்.

ஏனெனில், துரோகிகளின் கைகளில் சிக்கி உயிரிழப்பதைவிட தற்கொலை செய்வது மரியாதைக்குரியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வசீம் ரிஜ்வீ மிதவாத இஸ்லாமியத் தலைவர் ஆவார். மதவெறி எண்ணம் இல்லாமல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நியாயமான விஷயங்களுக்கு ஆதரவு அளித்து வருபவரும் கூட . எனவே இவரை இஸ்லாமிய அமைப்புகள் வெறுத்து வருகின்றன. இவர்தான் அயோத்தியில் இராமர் கோவிலை கட்ட வேண்டும் என்று ஆதரவு குரல் நீட்டிய இஸ்லாமிய தலைவர்களில் ஒருவர்.
இவர் சமீபத்தில் கூட நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் இந்தியாவிலுள்ள மதரஸாக்கள் அனைத்தும் உடனே மூடப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதி பேர் இன்னும் பதினைந்து வருடங்களில் தீவிரவாதிகளாக மாறிவிடுவார்கள். மதரஸாக்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கொள்கைகளை இஸ்லாமிய மக்களிடம் தினிக்கிறது என்று வெளிப்படையாக கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply