தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக வளரவேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைத்தவிர்க்க வேண்டும் என துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி கூறினார்.


சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற துக்ளக் 48-ஆவது ஆண்டுவிழாவில், வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த குருமூர்த்தி கூறியதாவது:


ஆசிரியர் சோவுடன் என்னை ஒப்பிடக்கூடாது. ஒருவருடைய நகலாக இன்னொருவர் இருக்கவேமுடியாது. ஆசிரியர் சோவின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவருடைய பாணியை துக்ளக்கில் பின்பற்ற முயற்சிக்கக்கூடாது.


அவ்வாறு ஜெயலலிதாவின் பாணியை அப்படியேபின்பற்ற முயன்ற சசிகலாவின் நிலை என்ன ஆனது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் தான் எனக்கென ஒருபாணியை வைத்துக்கொண்டு, துக்ளக் இதழை நடத்தி வருகிறேன். 


உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகை யாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தது மிகப்பெரிய தவறு. நீதித்துறைக்கே மிகப் பெரிய இழுக்கு. இதற்குப் பின்னால் ஏதாவது சதி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு எதிரானவர்கள் அனைவருக்கும் இது ஒருவாய்ப்பாக அமைந்துவிட்டது.


நாட்டில் ஒரு உச்சநீதிமன்றம்தான் உள்ளது. ஆனால், பல உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இந்த உயர் நீதிமன்றங்களிலும் இதுபோல பலப்பிரச்னைகள் உள்ளன. எனவே, இந்த 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் போல, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் வெளியில்வந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தால், மிகவும்மோசமான நிலை உருவாகிவிடும். எனவே, அந்த 4 நீதிபதிகளும் அவர்கள் செய்தசெயலுக்காக வருத்தம் தெரிவித்தால்தான் நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை நிலைநாட்டப்படும்.


இலவச திட்டங்கள் காரணமாக, மாநிலத்தின் முன்னேற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும் செலவழிப்பதற்கு தமிழக அரசிடம் பணம்இல்லை. இலவசத் திட்டங்களுக்கு மட்டுமே ரூ. 5,400 கோடி செலவழிக்கப் படுகிறது. மானியங்களுக்கு மட்டுமே ரூ. 68 ஆயிரம் கோடி செலவழிக்கப் பட்டுள்ளது. 2001-இல் ரூ. 3 ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்திவந்த தமிழகம் இப்போது எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ரூ. 20 ஆயிரம்கோடி வட்டி செலுத்தி வருகிறது.

தேசிய கட்சிகளான காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தமிழகத்தில் வளரவேண்டும் என்றால், கழகங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைத் தவிர்க்கவேண்டும். 1989-இல் அதிமுக இரண்டாகப் பிரிந்திருந்த சமயத்தில், இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வைக்காமல் காங்கிரஸ் தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் 20 சதவீத வாக்குகளை காங்கிரஸ்பெற்றது. இது சாதாரண விஷயமல்ல. 


இதை தேசிய கட்சிகள் உறுதியாக நம்பி, இன்றைய சூழலில் தனிப்பட்ட முறையில் போட்டியிட்டால் தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெறமுடியும். மேலும், ரஜினிகாந்த் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது, அவருடன் தேசியகட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டால், அவர்களுக்கு பெரியளவில் மேம்பாடு இருக்கும்.

இந்து மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை திராவிடகழகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது மிகப்பெரிய தவறு. பாஜக மங்கவில்லை: 2019-இல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற கவலை பலருக்கு உள்ளது. அந்தக்கவலை தேவையற்றது. பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்களின் அபிமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பாஜக மங்கவில்லை. 
திராவிடகட்சிகளை அடக்குவதற்கு, பாஜக தலைவர்கள் அனைவரும் இணைந்து செயல் பட்டால் நிச்சயம் சாத்தியமாகும் என்றார் குரு மூர்த்தி

Tags:

Leave a Reply