புதிய ஆளுநராக ஆனந்திபென் படேல் இன்று பதவியேற்று கொண்டார். மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த ராம்நரேஷ் யாதவின் பதவிக் காலம், கடந்த 2016ல் முடிவடைந்தது.

இதையடுத்து குஜராத் ஆளுநர் ஓ.பி.கோலியிடம், மத்தியப்பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப் பட்டது.

இந்த சூழலில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்திபென் படேல்(76), மத்தியப் பிரதேச ஆளுநராக நியமித்து, குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வந்தது.

இதையடுத்து மத்தியப் பிரதேச ஆளுநராக ஆனந்திபென் படேல் இன்று பதவியேற்று கொண்டார்.

அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் ஆனந்தி பென் படேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply