ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேட்டில் குற்றவாளிகளாக கண்டறியப் படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு முக்கியத்துவ மானவர்களாக இருந்தாலும் இந்த அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பமுடியாது என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி உறுதியளித்தார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் சோதனை நடத்தியபோது அவர் லண்டன், துபாய், இலங்கை, பிரான்சு, அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் 14 நாடுகளில் ரியல்எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாக டெல்லியில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தமுதலீடுகள் செய்யப்பட்ட போது ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார். ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரை கைதுசெய்ய வேண்டும், உடனடி நடவடிக்கை வேண்டும் என நேற்று அ.தி.மு.க எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டது.

இன்றும் பாராளுமன்ற கூட்டம் கூடியதும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அந்த பத்திரிகையை காண்பித்து ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய வேண்டும், உடனடி நடவடிக்கை வேண்டும் என்று ஆங்கிலத்திலும், தமிழிலும் கோஷம் எழுப்பினார்கள்.

இன்றைய கேள்விநேரத்திற்கு பிறகு இவ்விவகாரத்தை எடுத்து கொள்ளலாம் என சபாநாயகர் கூறினார். அ.தி.மு.க உறுப்பினர்கள் அதை ஏற்று கொள்லாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பகல் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் இது குறித்துப்  பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் குற்றவாளிகளாக கண்டறியப் படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு முக்கியத்துவ மானவர்களாக இருந்தாலும் அரசின் நடவடிக்கையில் இருந்து தப்பமுடியாது என்று உறுதியளித்தார்.

யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, அந்தளவுக்கு புனிதமான பசுக்கள் எங்களிடம் இல்லை எனவும் ஜெட்லி குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply