எட்டாவது சா்வதேச யோகாதினத்தை முன்னிட்டு கா்நாடக மாநிலம் மைசூரில் செவ்வாய்க் கிழமை 15,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சியில் பேசியபிரதமா் நரேந்திர மோடி, யோகா, இந்த உலகத்துக்கே அமைதியைத் தருகிறது என்றார்.

நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, இந்த ஒட்டுமொத்த உலகமும், நமது உடலிலிருந்தும், ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்ககிறது. இந்த உலகமே நம்மிடமிருந்து தான் தொடங்குகிறது.

மற்றும், இந்த யோகா தான், நமக்குள் இருக்கும் அனைத்தையுமே நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. யோகா நமக்கு அமைதியைக்கொடுக்கிறது. யோகா ஏற்படுத்தும் அமைதிஎன்பது தனி நபர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, நமது சமூகத்துக்கே யோகா அமைதியை கொடுக்கிறது. இந்தநாட்டுக்கும், உலகத்துக்கும் அமைதியை கொடுக்கிறது யோகா. மற்றும் இந்தபிரபஞ்சத்துக்கே அமைதியைக் கொடுப்பது யோகா தான் என்று மோடி குறிப்பிட்டுப் பேசினார்.

Comments are closed.