ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கைமுடிவு சரியானது தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ஒப்பந்தத்தில் சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் நீதிமன்றம் அதனை விசாரித்தது. ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான கொள்கைமுடிவு, தொகை, ஒப்பந்ததாரர் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது. விசாரணையில், மத்திய அரசின் ஒப்பந்தம் சரியானதுதான் என்று தெரிய வந்துள்ளது.

வணிக ரீதியாக எந்த சலுகையும் அளிக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை, ரஃபேல் ஒப்பந்தம் சரியானது தான், திருப்தி அளிக்கிறது என்று தெரிய வந்திருப்பதால், அந்தவிவகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இந்திய விமானப்படைக்காக, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. குறிப்பாக அதன் தலைவர் ராகுல் காந்தி நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில்இந்தப் பொய் குற்றச்சாட்டுகளை  திரும்பத் திரும்பக் கூறி வாக்குகள் சேகரித்தார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க  உத்தேசித்த விலையைக் காட்டிலும் அதிக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரிபாகங்களைத் தயாரிப்பதற்கா ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்.  அணில் அம்பானிக்கு மட்டும் எப்படி சலுகை காட்டலாம், என்றெல்லாம் புழுகு மூட்டைகளை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply