ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.

விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய தாவது: அதிமுக., மற்றும் திமுக.,வால் இளைஞர்களை ஈர்க்கமுடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல்மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்லவாய்ப்பு உள்ளது. கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத்தசெயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல்.

ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்குவருகிறார் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply