நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி காந்த் தனிக் கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவேன் என இன்று (டிச.,31). பத்திரிகையா ளர்களை சந்திப்பில் இதை அறிவித்தார்.

கடந்த சிலநாட்களாக ரஜினி பலகட்டங்களாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.கடந்த முறை இதேபோல நடந்த ரசிகர்களின் சந்திப்பின் போது போர் வரும்போது பார்க்கலாம் என்றார்.

இந்தவார சந்திப்பில்," வரும் 31 ம் தேதி அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்’ என்றார். இதனால் ரஜினி என்ன முடிவு எடுப்பார் என பெரும் எதிர் பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பு குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறுகையில்,’ ஊழலற்ற நிர்வாகத்தை தருவதற்கானத்தான் 1996ல் ஊழல் மலிந்திருந்த உடனேயே தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது வாய்ஸ் கொடுக்கிறேன் என சொன்னார். இப்போதைய அரசியல் சூழலில் சமீபகாலமாக ஆர்கே நகர் போன்ற தேர்தல்களை பார்க்கும்போது தமிழகத்தில் ஊழலை எதிர்த்து போட்டியிட பலகரங்கள் தேவைப்படுகிறது.

பலம் இன்னும் கூடுதலாக தேவைப் படுகிறது. ரஜினி அரசியலால் யாருக்கும் பின்னடைவு இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்கிறேன் என்று ரஜினிசொன்னால் அவர் நிச்சயம் மோடியால் தான் தரமுடியும். இதனால் அவர் பாஜகவுடன் தான் சேர்வார் என்பது என்னுடைய கணிப்பு என்றார்.

Leave a Reply