“ரஜினியோட அரசியல் என்ட்ரி, திமுகவை பாதிக்காது. பிஜேபி ஓட்டைதான் பிரிக்கும். திமுக ஆட்சிக்குவரத்தான் வழிவகுக்கும்” ன்னு, இன்னும் பலப்பல பதிவுகள். இதெல்லாம் மோடி, அமித்ஷா & ரஜினிக்கு தெரியாதா ?.திமுக ஆட்சிக்கு வர்றதுக்கா இவ்ளோ மெனக்கெட்டு, 25 வருசமா வராத ரஜினிய வரவெச்சாங்க ?.
இப்ப, போனமாசம் பீகார் தேர்தல் நடந்ததே… நியாபகமிருக்கா ?. அந்த தேர்தல்… லல்லு கட்சி & காங்கிரசுக்கு வாழ்வா ? சாவா ? தேர்தல். ஆனா பிஜேபி, அதுல ‘கரணம் தப்பினா மரணம்’ ன்ற மாதிரி,

ஒரு விபரீதவிளையாட்ட விளையாண்டு பார்த்தது. ஜெயிக்கவும் செஞ்சது. இதுவரைக்கும், “நீ இல்லேன்னா, என்னெ ஆதரிக்க அவன் இருக்கான்” னு தெனாவெட்டா திரிஞ்ச நிதிஷ் குமார, பொட்டிப் பாம்பா உக்கார வெச்சுட்டாங்க. அரசியல் தெரிஞ்சவங்களுக்கு, அது எப்படிப்பட்ட மரணவிளையாட்டுனு தெரியும். மோடி & அமித்ஷா கூட்டணி… தேர்தல்ல ஜெய்க்குறதைத் தாண்டி, எக்ஸ்பிரிமெண்ட் லெவலுக்கு அப்கிரேட் ஆயிட்டாங்க. “யாரு வரணும்” ன்றத விட, “யாரு வரக்கூடாது” ன்ற விஷயத்துல தெளிவா இருக்காங்க.

ஏன்னா… யாரு விரும்பினாலும், எதிர்த்தாலும்… மத்தியில இன்னும் 25 வருசத்துக்கு பிஜேபி ஆட்சிதான். அப்படி இருக்கும் போது… நாட்டுக்குள்ள செய்யவேண்டிய வேலைகள் ஏராளமா இருக்கு. அதை செய்ய, ஒன்னா பிஜேபி ஆட்சி இருக்கணும். இல்லேன்னா… பிஜேபிக்கு இணக்கமான ஆட்சியாஇருக்கணும். இணக்கமான ஆட்சிய கொண்டு வர்றதுக்கான வேலைகள்ள ஒன்னுதான்… ‘ரஜினி’ ன்ற காளையன களத்துக்கு கொண்டு வந்தது. ரஜினி… திமுகவுக்கு மட்டுமே வைக்கப்பட்ட ‘செக்’ கில்ல. அதிமுகவுக்கும் சேர்த்துதான்.

யாரைக் காக்கணும், யாரைத் தூக்கணும்னு காளையனுக்கும் தெரியும், காளையன களத்துக்கு கொண்டு வந்தவங்களுக்கும்தெரியும். இடைல, நாம வாயவெச்சுட்டு கம்முன்னு இருந்தாப் போதும் !!! ❣👌👏

நன்றி சக்திவேல்

Comments are closed.