ரஜினி அரசியலுக்குவந்து, பா.ஜ.க.,வில் சேரவேண்டும் என்பது என் விருப்பம்,” என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்தபேட்டி: பஞ்சமி நிலம் மற்றும் அரசு நிலத்தை யார் ஆக்கிரமித் திருந்தாலும், அதை திரும்ப அரசிடம் ஒப்படைக்க வேண்டும். திமுக., பல முறை ஆட்சியில் இருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர் ரஜினி காந்த், கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.