காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தி உள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘லோக்சபாவில், ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தில், பதில் அளிக்க முடியாமல், ஒருபெண்ணை பதில் சொல்ல அனுப்பி விட்டு,

பிரதமர் மோடி ஓடி ஒளிந்துவிட்டார்’ என காங்கிரஸ்., தலைவர் ராகுல், சமீபத்தில் கூறினார்.

இது குறித்து, உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் நேற்று நடந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது: நம் நாட்டில், ஒரு பெண், ராணுவ அமைச்சர் பதவி வகிப்பது இதுவே, முதல்முறை. ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அளித்த பதிலால், காங்கிரசார் வாயடைத்து போய் உள்ளனர்.

அவர்களால், எதிர் கேள்வி கேட்கமுடியாமல், அமைச்சரை இழிவுபடுத்தி பேசுகின்றனர். இந்தபேச்சு, நிர்மலா சீதாராமனை மட்டுமின்றி, ஒட்டுமொத்த பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் செயல். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply