ராகுல்காந்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்வது என்பது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுபேட்டையில் உள்ள தன்வந்திரி ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் சிறப்புவிருந்தினராக பங்கேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

ராகுல் வருகை என்பது தமிழகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரம்செய்கிறாரோ, அங்கெல்லாம் மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகின்றனர். ராகுல காந்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம்செய்வது என்பது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

பின்னர் அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ந்து அமைக்கப்பட்ட இந்த கூட்டணி, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை சொல்லி கேட்டோம். தற்போது 5 ஆண்டுகால ஆட்சியில் அடைந்துள்ள வளர்ச்சியை சொல்லி வாக்குகேட்போம் என்றார்.

மேலும் பொள்ளாச்சி பாலியல்விவகாரம் குறித்த கேள்விக்கு விவரம் தெரியவில்லை என்று கூறிய இல. கணேசன், இதுபோன்ற செய்திகளை நான் ஆழமாகபடித்து தெரிந்து கொள்வதில்லை என்று கூறினார்.

Leave a Reply