ரபேல் விவகாரம்  இன்று மத்திய  அரசின் மீது தவறில்லை என  உச்சநீதிமன்றம்  கருத்துக் கூறியிருக்கிறது.  திரும்ப  திரும்ப  தவறான  ஒரு கருத்தைமக்களிடம்  பதிய  வைத்து  தவறான  ஓர்  நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்  ராகுல்இந்த  தேசத்து  மக்களிடம்  மன்னிப்பு  கேட்க வேண்டும்.

                இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு எந்தத்தவறும் செய்யவில்லை என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததற்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்காக வாங்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பையே காங்கிரஸ் கேள்விக் குறியாக்குகிறது. ஆக காங்கிரஸ் தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியை குறை கூறும் மற்ற கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

Leave a Reply