முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ்பிரதாப் ரூடி, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுவதாக தலைவர் அமித் ஷா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

பிகார் மாநிலம், சரன் மக்களவை தொகுதியிலிருந்து எம்பி.யாக் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ்பிரதாப் ரூடி, 2014-இல் நரேந்திர மோடி தலைமையேற்ற அமைச்சரவையில் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இரண்டாண்டுகள் அப்பதவியில் இருந்த அவரை, கட்சிப்பணிகளை கவனிக்க ஆட்கள் தேவையென கட்சித்தலைமை அவரைப் பணித்தது. அதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரூடி, கட்சிப் பணிகளை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில்  ரூடியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிப்பதாக கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ள ரூடி, தனியார் விமானங்களில் மேற்கொண்ட பயணங்களுக் காகவே, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒரே எம்.பி., என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Leave a Reply