ராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதுவரை ராஜ்ய சபாவில் தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் தன்னுடைய அடையாளத் தை பிஜேபியிடம் பறி கொடுத்துள்ளது. நேற்றுவரை யில் ராஜ்ய சபையில் 57 ஆக இருந்த பிஜேபி உறுப்பி னர்களின் எண்ணிக்கை இப்பொழுது 58 ஆக உயர்ந்து ள்ளது.

மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வாகியுள்ள சம்பட்டியா உய்கி என்கிற பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் மணி தான் ராஜ்யசபா வில் பிஜேபி காங்கிரஸை முந்து வதற்கு காரணமானவர்.

வாழ்த்துக்கள் மேடம் பிஜேபி யின் வெற்றி வரலாற்றில் நீங்களும் வந்து கொண்டே இருப்பீர்கள், 250 உறுப்பினர்களை கொண்ட ராஜ்ய சபாவிற்கு தற்பொ ழுது 245 எம்பிக்கள் தான் தேர்வாவது வழக்கம்.அதிலும் 233 எம்பிக்கள் மாநிலங்கள் வாரியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந் தெடுக்கப்படுவதும் எஞ்சிய 12 உறுப்பினர்கள் ஜனாதிபதி யாலும் நியமிக்கப்படுவது வழக்கம்..

ராஜ்ய சபையில் மெஜாரிட்டி பெருவதற்கு 117 உறுப்பின ர்கள் இல் லாத காரணத்தினால் பிஜேபி அரசு கொண்டு வரும் தீர்மானங்கள் லோக்சபாவில் வெற்றி பெற்றாலும் மாநிலங்களவையான ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டே வந்தது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் பிஜேபிக்கு பெரும்பான்மையான ராஜ்ய சபை எம்பிக்கள் ஒட்டு போட்டார்கள். நிதிஷ்குமார் பிஜேபி கூட்டணியில் இணைந்ததால் ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்பிக்களும் பிஜேபி கூட்டணி பக்கம் வந்து விட்டார்கள். அதனால் இப்பொழுது பிஜேபி கூட்டணிக்கு ராஜ்ய சபையில் 86 எம்பிக்கள் உள்ளார்கள்.

அடுத்து அதிமுக முறைப்படியாக பிஜேபி கூட்டணியில் இணைகிற து இதனால் அதிமுகவின் 13 எம்பிக்களும் பிஜேபி கூட்டணியின் அங்கமாகி ராஜ்ய சபையில் பிஜே பி கூட்டணியின் பலம் 99 ஆக உயர்ந்துவிடும்.

ஜனாதிபதி தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளத் தின் 8 எம்பிக்கள் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் 3 எம்பிக்கள் ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிர சின் 1 எம்பி அரியானாவில் சவுதாலாவின் இந்திய ராஷ் டிரிய லோக்தளத்தின் 1 எம்பி சுயேச்சை எம்பிக்கள் 6
பேர் உதவியுடன் பிஜேபி கூட்டணி ராஜ்ய சபையில் மெஜாரிட்டி யை எட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

இதோடு குஜராத்தில் இப்பொழுது பிஜேபிக்கு இரண்டு காங்கிரசுக்கு 1 என மூன்று ராஜ்யசபை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.அதனால் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.பிஜேபியின் அமித்ஷா ஸ்ம்ரிதி இரானி இருவரின் வெற்றி உறுதியான நிலை யில் காங்கிரஸ் எம்பியாக இருக்கும் அகமதுபடேலை தோற்கடிக்
க பிஜேபி வகுத்த வியூகத்தில் காங்கிரஸ் கூடாரமே கதி கலங்கி நிற்கிறது.

அனேகமாக மூன்றாவது வேட்பாளாராக பிஜேபி இறக்கி விட்டுள்ள பால்வாந்தினி ராஜ்புத் அகமது படேலை தோற்கடித்துவிடுவார் என் றே நான் நினைக் கிறேன்.சோனியாவின் ஆலோசகர் அகமது படே லை ஜெயிக்க வைக்க காங்கிரஸ் இளவல் ராகுல் கொடுத்த ஆலோசனைகளால் இப்பொழுது காங்கிரஸ் குஜராத் கர்நாடகம் என்று இரண்டு மாநிலங்களிலும் கந்தலாகி நிற்கிறது.

பிஜேபி காங்கிரஸ் பக்கம் உள்ள ராஜ்ய சபை சீட்டை பறிக்க வகுத்த வியூகங்களுக்கு பயந்த காங்கிரஸ் கட்சி தன்னுடைய எம்எல்ஏக் களை கூவாத்தூர் ஸ்டைலில் பெங்களூரு ஈகிள்டன் கோல்ப்ரி சார் ட்டில் அடைத்து வைக்க இப்பொழுது அதுவே காங்கிரசுக்கு எமனாகி விட்டது.

மாநிலமெங்கும் வெள்ளத்தினால் சிக்கி குஜராத் மக்கள் பரிதவிக்க காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களோ சோனியா வின் ஆலோசகர் அகமது பட்டேலை ஜெயிக்கவைக்க பெங்களுரூ சொகுசு விடுதி யில் தங்கி கும்மாளம் போடும் படங்கள் குஜராத் மக்களை கொந்த ளிக்க வைத்துள்ளது. இதனால் இந்தாண்டு இறுதியில் தேர்தல்
வர இருக்கும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கரை சேராது என்பது உறுதியாகிவிட்டது.

குஜராத் எம்எல்ஏக்களை குறிவைத்து நடந்த ரெய்டில் சிக்கியுள்ள கர்நாடகாவின் காங்கிரஸ் மந்திரி சிவக்கு மாரினால் காங்கிரஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் காலி யாகும் சூழல் உருவாகியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மந்திரிகளுக்கு எதிராக நடக்கும் ரெய்டினால்
மாநிலமெங்கும் காங்கி ரஸ்க்கு எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது
.
ஆக ஒற்றை ராஜ்யசபை எம்பி பதவியை தக்கவைக்க காங்கிரஸ் தலைமை கொடுத்த ஆலோசனைகளால் இரண்டு மாநில சட்டம ன்ற தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வ உள்ளது.சரி.அகமது படேலுக்கு.ராஜ்ய சபை சீட்டாவது கிடைக்குமா என்றால் அதுவும் கிடைக்காது.

தன்னுடைய எம்பி பதவியை தக்க வைக்ககுஜராத்தில் வெள்ளத் தினால் மக்கள் கதறிக்கொண்டு இருக்க ஆறுதல் சொல்ல வேண் டிய எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்து அடை காக்கும் ஐடியாவை கொடுத்த அகமது படேல் சோனியாவின் சூப்பர் ஆலோச கராம்..அதான் காங்கிரஸ் இப்படி இருக்கிறது.

ஏழ்மையான பழங்குடி இனத்தில் பிறந்த சாமானியரும் பிஜேபியில் உயர்பதவிக்கு வரமுடியும் என்பதற்கு இந்த சம்பட்டியா உய்கியின் தேர்வு சம்மட்டியால் அடித்தது மாதிரி நாட்டு மக்களுக்கு சொல்கிறதல்லவா…

மீண்டும் வாழ்த்துக்கள் மேடம்…

நன்றி விஜயகுமார் அருணகிரி

Leave a Reply