படையெடுப்பு நடந்தால் இந்தியாவால் வெற்றி பெற முடியாது ஏன்னா கையிலே ஆயுதங்கள் இல்லை என பத்திரிக்கைகள் கிளப்பிவிட அதை நம்பி இங்கே பலர் ஆகா மோடி அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள்.

முதலிலே ஏன் ஆயுதங்கள் பற்றாக்குறை என பார்ப்போம். இங்கே ஆயுதங்கள் என சொல்வது ஏவுகணைகளோ அல்லது அணு குண்டுகளோ அல்ல. அதெல்லாம் தேவைக்கு மேலேயே இருக்கிறது.

இல்லாமல் இருந்தது பீரங்கிகள், டாங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள். வீரர்களுக்கு தேவையான உடல் மற்றும் தலை கவசங்கள், காலணிகள் முதலியவை தான்.இதை படிக்கும்போது உங்களுக்கே ஒரு கேள்வி வரும். ஏன் அணு குண்டு செய்யமுடியும், ஏவுகணை செய்யமுடியும் நாட்டிலே துப்பாக்கியும் பீரங்கியும் குண்டுகளும் செய்யமுடியவில்லை என?

செய்கிறார்கள். ஆனால் அரசிலே இருக்கும் அதிகாரிகள் மற்றும் முந்தைய அரசிலே இருந்த அரசியல்வாதிகளால் லஞ்சம் ஊழலுக்காக வெளிநாட்டிலே வாங்கவேண்டும் என செய்து இந்தியாவிலே தயாரிப்பதை வாங்கவில்லை.

ஆவடியிலே அர்ஜூன் டேங்க் செய்தார்கள். அது என்னவாயிற்று? முதலிலே ராணுவம் ரயிலிலே ஏற்றிக்கொண்டு போகும்படியான அளவிலே கேட்டார்கள். அவர்கள் சொன்னது படி டிஆர்டிஓ தயாரித்தது. அதை சோதனை செய்துவிட்டு இன்னும் கொஞ்சம் அகலமாக வேண்டும் என கேட்டார்கள். அதை தயாரித்த பின்னர் கூடாது முதலிலே போல சின்னதாக வேண்டும் என கேட்டார்கள். இப்படியே கும்மியடித்து அர்ஜூன் டேங்க் சரியில்லை என மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். இதற்கு பத்திரிக்கைகளும் உடந்தை. இவ்வளவுக்கும் அர்ஜூன் மிக தரமான டாங்க்.

இது தான் இப்படி என்றால் தனியாரிடம் இருந்து வாங்குவதும். மனோகர் பரிக்கர் அமைச்சரானவுடனே காலணீகள் ஒரு ஜோடி 25,000 ரூபாய்க்கு எங்கே வாங்குகிறார்கள் என பார்த்தால் இந்தியாவிலே உள்ள நிறுவனம் அதை தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. வெளிநாட்டிலே இருந்து திரும்பவும் ராணுவம் வாங்குகிறது. இந்தியா ஏற்றுமதி செய்வது ஜோடி 2000 ரூபாய்க்கு. வாங்குவதே 25,000 ரூபாய்க்கு. பரிக்கர் கேட்டபோது இந்திய நிறுவனம் என்றால் அரசு அதிகாரிகள் பணமே தரமாட்டார்கள். வெளிநாட்டு நிறுவனம் என்றால் மட்டுமே தருவார்கள் எனவே தான் நாங்கள் அரசிற்கு எதையும் விற்பதில்லை என சொல்லிவிட்டார்கள்.

பின்பு பேசி அமைச்சரே உறுதி அளித்து அந்த நிறுவனம் விற்க ஒப்புக்கொண்டது. இப்படி ஏராளமான ஓட்டைகள் உடைசல்கள். கான்கிரஸ் அரசு அப்படி விளையாடி இருக்கிறது.அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் எந்த நாடும் விற்காது. எனவே அதிலே கமிஷன் அடிக்கமுடியாது. ஆனால் துப்பாக்கி டாங்கி வெளியே வாங்கினால் தானே கமிஷன் அடிக்க முடியும் என்பது தான் இந்த ஊழலுக்கு காரணம்.

இதோடு நின்றதா என்றால் அது தான் கிடையாது. எந்த துப்பாக்கி வாங்கவேண்டும் என அரசு அதிகாரிகள் முடிவு செய்வார்கள் ராணுவம் அல்ல.இதை மாற்ற மோடி அரசு என்ன செய்தது?

ராணுவத்திடம் ஒரு தொகையை கொடுத்து வேண்டியதை வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டது. அதுவும் போன வருடம் அக்டோபரிலே. அப்போது இருந்து ஆறு மாதத்திலே 12,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியிருக்கிறார்கள். இப்போது அந்த அதிகாரத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து 40,000 கோடி ஒதுக்கியிருக்கிறது.இப்படி செய்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.

இதிலே இடைத்தரகர்கள் இல்லாமல் பாதுகாப்பு துறை ஐஏஎஸ் ஆப்பிசருங்களுக்கு காத்திராமல் ராணுவமே வாங்கி கொள்லலாம்.துப்பாக்கிகள், ஹெல்மெட்டுகள், ஷுக்கள், புல்லட் புரூப் உடைகள் என பலதும் வாங்கி தள்ளப்படுகின்றன. போர்பஸ் பீரங்கி வாங்கியதற்கு அப்புறம் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து இப்போது தான் பீரங்கிகள் வாங்கப்படுகின்றன.

பத்திரிக்கைகள் குறிப்பிடும் நிலை 2013 இல் இருந்ததை 2015 இல் தணிக்கை செய்தபோது வெளிவந்தது தான். அதன் பின்பு ஏகப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கின்றன. மோடி அரசு ஏதும் செய்யவில்லை என்றால் விமர்சிப்பதிலே நியாயம் இருக்கிறது. செய்யும் போது அதுவும் நிரந்தர தீர்வுகளை முன்வைக்கும்போது ஏன் அறியாமல் விமர்சிக்கவேண்டும்?

சீனாவின் மிரட்டலை சமாளிக்க வியட்நாமிற்கு ஏவுகணைகளை வழங்கியிருக்கிறது. பர்மாவுடன் ராணுவ கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஈராக் மசூலிலே ஜெனரல் விகே சிங் போயிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். ஆப்கானிஸ்தானிற்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகஜிஸ்தானிலே போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கும் மேலே என்ன தான் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?

Leave a Reply