அயோத்தியில் ராமர்கோயில் கட்டப்பட வேண்டும் என பாஜக.,வின் நிலைப் பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் இந்தவிவகாரம் தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளதால், இதில் நீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு , அப்போதைய சூழலுக்கேற்ப நல்லமுடிவை மத்திய அரசு நிச்சயம் எடுக்கும்.

அதற்கு முன்னர், இந்தவிவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தவேண்டியது அவசியம். அதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளபட்டு வருகின்றன. பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுவருகிறார். அவர், அயோத்திக்கு செல்லாமல் இருப்பதற்கு குறிப்பிட்ட காரணம் ஒன்றும் இல்லை. சங்கபரிவார் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களின் உணர்வுகளை மோடி நன்றாக புரிந்துகொண்டுள்ளார்.

 இந்த விஷயத்தில் அவர்கள் மோடியை விமர் சிக்காமல் இருந்தால், சரியான நேரத்தில் அவர் அயோத்திக்கு வருகைபுரிவார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனது மெளனத்தைக் களைய வேண்டும்; அவர் அயோத்திக்கு வருகை தர வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு அண்மையில் வலியுறுத்தியிருந்தது. இதற்கு பதிலடி தரும் விதத்தில், மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

Leave a Reply