5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆளும் மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய இடங்களில் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி.

பாஜக தொண்டர்கள் தேர்தல்வேலைகளில் மூழ்கியிருப்பதால் நான் தலைவர் பதவியில் நீடிப்பதை கட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்ததும் பாஜக சட்டவிதிகளின்படி கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். கட்சி விதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை.

2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சமயத்திலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கமாட்டேன். கட்சியில் என்னைவிட மூத்தவர்கள் குறைந்தபட்சம் 15 தலைவர்களாவது இருப்பார்கள். ஆகவே, அப்படியொரு வாய்ப்பு குறித்து நான் சிந்திக்கவில்லை.

மக்களவைத் தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது , இனி எதிர்க் கட்சிகள்தான் தயாராக வேண்டும் . நடைபெற்று முடிந்துள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆளும் 3 மாநிலங்களிலும் மீண்டும் வெற்றிபெறுவோம் .

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்திலும் ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் அதை தடுத்து விட்டது. எனினும், ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

பாஜக தலைவர் அமித்ஷா

 

Leave a Reply