உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்காக ”ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா” என்ற அறக்கட்டளை அமைக்கபட்டுள்ளது. இதன் தலைவராக நிருத்ய கோபால் தாஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை நேரில்சந்தித்து பேசியது அறக்கட்டளைக்குழு. ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”ராமர் கோவில் கட்டுமான பணிகள் மத நல்லிணக்கத்திற்கு கேடு அல்லது வெறுப்புணர்வை தூண்டி விடாமல் அமைதியாக நடைபெற வேண்டும்” என்று பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தினார். நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.