தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயக ம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி ஏழை மக்களை ஆசை வார்த்தை காட்டி இஸ்லாம் மதத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட கும்பலை தட்டிக்கேட்டார். இதனால் கோபமுற்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஒரு பிரிவினர் ராமலிங்கத்தை வழிமறித்து வெட்டிக் கொன்றனர்.

கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்தகொலை விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் சம்மந்த பட்டவர்களை கைது செய்யவும் தண்டிக்கவும் வலியுறுத்தி திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர் ,போன்ற இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதேபோல் கும்பகோணம் நகரிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. படுகொலையான ராமலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் இன்று கும்பகோணத்தில் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்தன.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தபோதிலும் தடையை மீறி அமைதிப் பேரணி நடைபெற்றது இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

Leave a Reply