‘ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த குடியரசுத் தலைவராக விளங்குவார்’ என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வேட்பாள ரைத் தேர்வு செய்வதற்காக பாஜகவின் ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிஹாரின் ஆளுநராக உள்ள பாஜகவை சேர்ந்த ராம்நாத்கோவிந்த்தை வேட்பாளராக முன்நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த குடியரசுத் தலைவராக விளங்குவார் என உறுதியாகக் கூறுகிறேன். ஏழை, அடித்தட்டு மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்டமக்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து அவர் குரல்கொடுப்பார். அவரது சட்ட அறிவு மற்றும் புரிதல் நாட்டிற்குப் பயனளிக்கும். விவசாயி மகனான கோவிந்த் அவரது வாழ்வை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், பொதுவாழ்வுக்காகவும் தியாகம் செய்தவர்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply