நாட்டின் வளர்ச்சியை ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சீர்குலைத்து விட்டார் என்று பாஜக எம்.பி சுப்பிரமணிய சாமி தனிப்பட்ட முறையில் தாக்கிவிமர்சிப்பதை ஏற்க முடியாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.  

இதுகுறித்து ஜெட்லி நேற்று டெல்லியில் கூறியிருப்பதாவது,

 ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ரகுராம்ராஜனை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ரிசர்வ் வங்கி நாட்டின் மிக முக்கியத்துவம்வாய்ந்த தன்னாட்சி முடிவை எடுக்கும் அமைப்பாகும். அவர்களது முடிவில் நாம் விருப்பமோ அல்லது அதிருப்தியோ மேற்கொள்வது ஒருவரின் தனிப்பபட்டமுடிவை  சார்ந்தது. ஆனால் அந்தவிவகாரம் பொது இடத்தில் விவாதமாக மாறுவதை நாம் அனுமதிக்ககூடாது. ரிசர்வ் வங்கியும், அரசும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த உறவு தொடரவேண்டும். இந்த ஆண்டு இறுதியில் நிதிகொள்கை கமிட்டி கூடும்போது, வங்கியும் அரசு நியமன நபர்களும் கூடி நிதிக் கொள்கை குறித்து முடிவுசெய்வார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply