ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி பதிலளிக்க மாட்டார் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுவிவகாரம் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதுவரை இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தயார் இல்லை என்று அந்தக்கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

நாடாளுமன்ற முழக்கத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ரூபாய் நோட்டுவிவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயங்கியுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரம்குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டால் மத்திய அரசு விளக்கமளிக்க தயாராக உள்ளதாக வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். ஆனால் விவாதிக்கவேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தை முடக்குவதே அவர்களின் குறிக்கோள் என்றும், வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply