கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆணையில் முதல்வர் எடியூரப்பா கையெழுத் திட்டார்.

நீண்ட இழுபறிக்கு இடையே கர்நாடக முதல்வராக பதவியேற்றதும், விவசாயக்கடன் தள்ளுபடிக்கான ஆணையில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் எடியூரப்பா.

ஆளுநர் மாளிகையில் இன்றுகாலை கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பா, தலைமைச் செயலகத்தில்வந்து முதல்வர் பணிகளை தொடங்கினார்.

அப்போது, விவசாயிகள்பெற்ற தனிநபர் கடனில் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், இந்தவகையில், கர்நாடகாவில் விவசாயிகள் பெற்ற ரூ.56 ஆயிரம்கோடி விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம், எடியூரப்பா முதல்வர் பணிகளை தொடங்கியிருக்கும் நிலையில், தலைமைச்செயலக வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத் தலைவர்கள் தர்னாவில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply