இந்தியாவிற்கு குறைந்த பட்சம் ரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரை குடியுரிமை தகுதிபெறுவார்கள். 
 
நமது நாட்டில் தொழில் செய்வதை எளிமைப்படுத்தவும், முதலீடு, வருவாய், வேலை வாய்ப்புகளை பெருக்கவும் ஏற்றவிதத்தில், அன்னிய முதலீடுவரத்து குவிவதை நோக்கமாக கொண்டு, அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்தது. இந்தமாற்றங்களை கடந்த ஜூன் மாதம் 20–ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. 
 
இந்த மாற்றங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
 
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்தியாவிற்கு குறைந்த பட்சம் ரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதிபெறுவார்கள் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  
 
குறைந்தபட்சம் ரூ.10 கோடி அன்னிய நேரடி முதலீடு கொண்டு வருகிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 20 வருடங்கள் வரையில் குடியுரிமை தகுதிபெறுவார்கள். விசா நடைமுறை எளிதாக்கப்படும். சொத்துகள் வாங்கவும், குடும்பத்தினர் வேலை பெறவும் அனுமதி தரப்படும். இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை அளித்தது. சிரமத்தில் உள்ள கட்டுமானத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் பலநடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியமந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது.

Tags:

Leave a Reply