கேரளாவிற்கு ரூ.700 கோடி நிதிஉதவி தருவதாக ஐக்கிய  அமீரகம் எந்தமுடிவும் எடுக்க வில்லை என அதன் தூதர் அகமது அல்பன்னா தெரிவித்துள்ளார். 

 

கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்து போன கேரள மாநிலத்தை சீரமைப்பதற்கு நாடுமுழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

 

வெளிநாடுகளும் நிதி உதவிவழங்க முன் வந்து உள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி அளிப்பதாக அறிவிததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய  அமீரகம் எந்தமுடிவும் எடுக்க வில்லை என அதன் தூதர் அகமது அல்பன்னா தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியு தவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நிதித் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று, அது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

கேரளா இஸ்லாமிய  உறவோடு  இணைந்த ஒருபகுதி என்பதை கம்யூனிஸ்ட்டு கவனிக்க தவறியது.  இந்திய அரசின்கீழ் இருக்கும்  ஒருமாநிலம் வெளிநாட்டிலிருந்து இல்லாத ஒருவாய்ப்பை கொண்டாடுகிறது. என  பி.ஜே.பி தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம்  பொறுப்பாளர் அமித் மளவியா தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர்கூறியதாவது:


கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ 700 கோடி தருவதாக ஐக்கியஅரபு அமீரகம் கூறவே இல்லை. நிலைமை இப்படியிருக்க இது தொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும். எங்கிருந்து இந்த தகவலை அவர் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும்.


வெளிநாடு களிலிருந்து நிதிபெறுவது தொடர்பாக தயக்கங்களை வெளியிட்டவுடன் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திரமோடி மீதும் அவதூறு பிரச்சாரங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மோடியின் அரசு தவிர வேறு எந்த மத்திய அரசும் மாநிலத்திற்கு இந்தளவுக்கு நிதி ஒதுக்கியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply