40,000 ரொஹின்யா முஸ்லிம்கள் நாடுகடத்த BJP முடிவு செய்திருப்பது அநீதி இல்லையா? இதே பங்களாதேஷ் ஹிந்துகள் வந்தால் இதே போல் ஏற்க மறுக்குமா BJP? (கேள்வி: அபுல் ஹசன், மணிமாறன்)

2014 நவம்பர் மாதம் National Investigation Agency (NIA) ஹைதராபாத் நகரில் கலித் மொஹமத் என்பவனை கைது செய்தது. குற்றம்: சர்வதேச தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தது, இந்தியாவில் பங்களாதேஷ் எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தான் என்பதால்.

அவரிடம் நடந்த விசாரனையில் தான் தெரிந்தது அவர் இந்தியர் அல்ல, ரொஹின்யா முஸ்லிம். இவன் எப்படி இந்தியன் ஆனான்?

16அரசு ஆவனங்கள் இவனிடம் இருந்தது. அது எப்படி?

உலகளாவிய நாடுகள் கூட, பிரச்சனை இவர்களை வைத்து கொள்வது கூட அல்ல. ஏன் என்றால் அது ஒரு மனிதாபிமான விசயம். ஆனால் பிரச்சனை எங்கே வருகிறது என்றால் , அப்படி உதவும் நாடுகள் மீதே தாக்குதல்கள் நடத்தபடுவது தான். இதை இந்தியா மட்டும் அல்ல UK முழுவதும் சிரிய அகதிகளை ஏற்க முன்வந்த போது நாம் ஒரு நடு நிலையாளர்களாக பாரட்டினோம்.

ஆனால் கடந்த 9/11 தாக்குதலுக்கு பின்னர் உலகளாவிய அளவில் ஜிகாத் போராளிகளால் சுமார் 31,000தாக்குதல்கள் நடத்தபட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில் கடந்த 7வருடத்தில் ஐரோப்பிய தேசம் முழுவதும் பெரிய அளவு தாக்குதல்களை தினம் தினம் எதிர்கொள்கிறார்கள்.

அதில் பல இந்த அகதிகளாக தஞ்சம் அடைந்த மக்களால் நடத்தபடுவதாக புள்ளி விவரங்கள் கிடைக்க அந்த நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்? இதன் காரணமாக தான் அமெரிக்க பெரிய அளவில் அகதிகள் விசயத்தில் கண்டுகொள்ளவில்லை.

இப்போ நீங்கள் சொல்வது போல் இந்தியா இதில் மதம் பார்க்க வில்லை என்று நன்கு புரிந்துகொள்ளவும் – நம் நாட்டில் 40,000 ஆப்கன் அகதிகள் உள்ளனர். இந்தியா என்றுமே அவர்களை உடனடியாக காலிசெய்ய விரும்பவில்லை.

ஆனால் ஏன் இந்த ரொஹின்யா முஸ்லிம்கள் மட்டும் திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்ய வேண்டும்?

இன்னொரு முறை மும்பையில் 2012ல் நடந்த போராட்டத்தில் முதல் முதலாக இந்த ரொஹின்யா முஸ்லிம்கள் கலந்து வன்முறையில் முடிந்தது. அதுவும் இன்னொரு நாட்டில் சென்று வன்முறை செய்ய எந்த நாடு பொறுத்து கொள்ளும்?

இவர்களுடய நடவடிக்கையும் முழுக்க தீவிர கண்காணிக்க வேண்டியுள்ளது.

அட நம்ம திருப்பூர் வரை இவர்கள் எளிதில் ஊடுருவுவது எப்படி!

2013களில் கிடைக்கும் உளவியல் அறிக்கைகள் கூறுவது என்னவென்றால், அப்படி வந்த ரொஹின்யா முஸ்லிம்கள் அதிகம் தீவிரவாத குழுக்களுடன் காஷ்மீர் கேரளா மேற்கு வங்காளம் ஹைதரபாத் போன்ற இடங்களில் ஈடுபடுவதாகவும் , அவர்களை உள் நாட்டு தீவிரவாத ஆதரவாளர்கள் தூண்டுவதாகவும் கிடைக்கிறது. National Investigation Agency இவர்கள் மிக ஆபாத்தானவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது.

நான் ஒரு விசயம் ஏற்று கொள்வேன் , அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. 10% கூட இருக்க மாட்டார்கள். ஆனால் எதற்கு இந்த ரிஸ்க்?

அதாவது இவர்களுக்கு தங்க இடமும் கொடுத்து, சப்பாடும் போட்டு, இவர்களை தவறாக செல்லாமல் தடுக்க கண்காணிப்பும் செய்ய என்ன அவசியம்?

எனவே இவர்களை திருப்பி அனுப்ப உறுதியான காரணம் உண்டு. இவர்களை அனுப்பினால் இங்கே இருக்கும் அகதிகள் கொஞ்சமாது சட்டத்தை மதிப்பர்.

காங்கிரஸ் பொறுத்தவரை ஹைதராபாத், கேரளா வோட்டு போய்டுமோ என்று அரசியல் காரணத்தால் பயந்தனர். ஆனால் அவர்களும் இந்த விசயம் புரியும்.

ஶ்ரீலங்கா அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் கூட திருப்பி அனுப்பும் வேலை நடக்கவே செய்கிறது.

இந்த மக்களில் சிலர் இந்தியாவின் உதவியால் இருக்கிறோம் என்ற ஒரு எண்ணமே இப்போ இல்லை. இந்தியாவிலும் இவர்கள் புரட்சி கோசம் ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தனி தேசம் கோசம் அதிகம் இந்த முட்டாள்கள் தான் வலைதளங்களில் பேசுகிறார்கள்.

ஈழத்து மண்ணில் சாதித்துவிட்டனர், இப்போ இங்கே வந்து பேசுரானுக. அனைவரும் அல்ல, ஆனால் குறிப்பிட்ட சதவீதம் புரட்சி பேசி இங்கே இருப்பவனையும் கெடுக்கும் வேலை நடக்கிறது.

அங்கே போர் முடிவுக்கு வந்துவிட மெல்ல நாம் திரும்பி அனுப்பிவிடுவதுவே நலம். ஒரு நாளும் இவர்களுக்கு இந்தியர் என்று மனபான்மை வந்துவிடாது. இருப்பவனையும் இவர்கள் புரட்சி சிந்தனை கெடுத்துவிடும்.

ஆதார் அடையாள அட்டை எடுக்கும் போது இவர்கள் முயற்சித்ததும் அதில் கிடைக்கவில்லை என்றதும் ஆதார் அடையாள அட்டைக்கு எதிராக புரளிகள் கிழப்பிவிடுவது. மீனவர்கள் போர்வையில் கடத்தல் செய்வது, வட்டிக்கு விட்டு அடாவடிதனம் செய்வது என்று அனைத்து வேலையையும் செய்கிறார்கள் என்ற குற்றசாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

இவர்கள் பிரச்சனை என்றால் இவர்களையும் திருப்பி அனுப்புவது தான் நாம் நிம்மதியாக இருக்க வழி.

திபெத்திய அகதிகள் 80,000பேர் இருக்கிறார்கள். இவர்களால் பிரச்சனை இல்லை இன்றுவரை. 1959களில் இருந்து இங்கே தான் இருக்கிறார்கள். ஆனால் இந்திய சட்டத்தை மதித்து நன்றிகடனுடன் நடந்து கொள்கிறார்கள்.

எனவே மதம், இனம், நாடு அல்ல விசயம். அவர்களால் இந்த தேசத்திற்கு பிரச்சனை என்றால் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்!

தயவு கூர்ந்து அனைத்திலும் மதம் பார்க்காதீர்.

இறுதியாக :

1."சின்ன திருத்தம். இந்த அகதிகளை இந்தியா நாடு கடத்தவில்லை. அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. "நாடு கடத்த" என்ற எதிர்மறை வார்த்தை மக்களை தூண்டிவிட இந்த oneindia போல மூன்றாம் தர வலைதளங்கள் செய்யும் கேடு கெட்ட வேலை".

2.ஏன் தீவிரமாக இந்த மியான்மர் மக்கள் – ரொஹின்யா முஸ்லிம்களை வெறுக்கிறார்கள்? கொஞ்சம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.

நன்றி -மாரிதாஸ்

Leave a Reply