அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ.800 கோடி அளவுக்கு கடன்பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ரோடோமேக் நிறுவனத்தின் அதிபர் விக்ரம்கோத்தாரி கைது செய்யப்பட்டார்.

ரூ.800 கோடி கடன்வாங்கி திருப்பி செலுத்தாதது தொடர்பாக சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டதை அடுத்து, விக்ரம் கோத்தாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

முன்னதாக, ரோடோமேக் பேனா நிறுவனத்தின் உரிமை யாளரான விக்ரம் கோத்தாரி, பொதுத் துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன்வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் தலைமறைவானதாக செய்தி வெளியானது.

இதனை மறுத்த கோத்தாரி, ரூ.800 கோடி விவகாரம் என்பது மோசடியல்ல. நான் எங்கும் ஓடிவிடவில்லை. நான் ஒரு இந்திய பிரஜை. என் நாட்டின் மீது பற்று கொண்டவன். 

நான் கடனை திருப்பிச்செலுத்தாதவன் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. என் நிறுவனத்தை லாபம் ஈட்டாத நிறுவனம் என்றே அறிவித்துள்ளன. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. நான்தொடர்ந்து வங்கிகளுடன் பேசி வருகிறேன். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். கடன்களை நிச்சயம் திருப்பி செலுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ரோடோமேக் நிறுவனம் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு கடன் பெற்றுள்ளது என்ற எஃப்ஐஆர் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் வட்டியுடன் சேர்த்து ரூ. 3,695 கோடிக்கு ரோடோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி பெற்ற கடன் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 

வங்கிவாரியாக ரோடோமேக் அதிபர் விக்ரம் கோத்தாரி கடன்பெற்ற தொகையின் விவரம்:

  • பேங்க் ஆஃப் இந்தியா – 754.77 கோடி
  • பேங்க் ஆஃப் பரோடா – 456.63 கோடி
  • இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி – 771.07 கோடி
  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 458.95 கோடி
  • அலகாபாத் வங்கி – 330.68 கோடி
  • பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா – 49.82 கோடி
  • ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் – 97.47 கோடி

Leave a Reply