சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்யா அகதிகளை நாடுகடத்தும் விவகாரம் தொடர்பாக, வருகிற திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரோஹிங்யா இனத்தைசேர்ந்த இரண்டு பேர் தாக்கல் செய்த மனுவை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரமாணப்பத்திரம் தாக்கல்செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரோஹிங்யா இனத்தவரை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் குறித்து வருகிற திங்கட் கிழமை, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றார். இந்தநிலையில், மியான்மரிலிருந்து நாஃப்(Naf) ஆற்றின் வழியாக இந்திய எல்லைக்குள் ரோஹிங்யா மக்கள் நுழைவதை தடுப்பதுபற்றி வங்கதேச பிரதமர் ஷேக்ஹசீனாவுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதனிடையே, மியான்மர் நாட்டை ஒட்டியுள்ள, மிசோரம், மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல் பிரதேசம் ஆகிய 4 இந்திய மாநிலங்களின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply