அண்மையில் அமெரிக்காவும் சவுதியும் இணைந்து லஷ்கர் ஏ தைபா உட்பட 6 தீவிரவாத குழுக்கள் மீது தடைவிதித்ததுடன் இந்த இயக்கங்களுக்கு பண உதவிசெய்யும் தனிநபர்களைக் கைது செய்வதற்கும் முடிவெடுத்துள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான ஊடக செய்தி ஒன்றில் தெரிவிக்க பட்டுள்ளது.

இதன் ஒருகட்டமாக இரு அமைப்புக்களும் 4 தனி நபர்களும் குறி வைக்க பட்டிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. சவுதி அரேபியாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி செல்ல இரு நாட்களுக்கு முன்னர் இந்தநகர்வு இடம் பெற்றுள்ளதால் இது இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாஷிங்டனில் நடைபெற்ற அணுப்பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதமும் உலகளாவிய வலைய மைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதனை எதிர்கொள்ள அனைத்துதேசங்களும் இணைந்து செயற்படுவது என்பது முக்கியமானது என்று தெரிவித்திருந்தார்.

2008 ம் ஆண்டு இந்தியாவின் முக்கிய வர்த்தகநகரான மும்பையில் பொது மக்கள் மீது நடத்தப் பட்ட மோசமான தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்ததாகக் கருதப்பட்ட லஷ்கர் ஏ தைபா இயக்கம் செயற்பட்டதாக இந்திய அரசு குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply