லடாக் எல்லை ராணுவ முகாமுக்கு நேற்றுமுன்தினம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அங்குள்ள சிந்து நதிக் கரையில் பூஜைசெய்து வழிபட்டார்.

இமயமலையின் லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15-ம்தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே பெரியளவில் மோதல்வெடித்தது. இதில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் போர்ப்பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, லடாக்கில் உள்ள நிமு ராணுவ தளத்துக்கு நேற்று முன்தினம் திடீர்பயணம் மேற்கொண்டார். அங்கு சீன ராணுவத்தினருடனான மோதலில் வீர மரணமடைந்த நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், காயம்அடைந்த வீரர்களை சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன் தொடர்ச்சியாக, அங்கு முகாமிட்டுள்ள ராணுவவீரர்கள் மத்தியில் மோடி வீர உரையாற்றினார்.

இந்நிகழ்வுக்கு பிறகு, லடாக்கில் உள்ள சிந்து நதிக் கரைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ‘சிந்து தர்ஷன்’ பூஜையை மேற்கொண்டார். இந்தியாவின் ஒருமைப்பாடு, அமைதி, சமூக நல்லிணக் கத்தின் சின்னமாக சிந்துநதி விளங்குகிறது என்பதை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பவுர்ணமி நாளன்று இங்கு இந்தப்பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

Comments are closed.