நெடுஞ்சாலைகளில் நிகழும் கோரவிபத்துக்களை அடுத்த 5 ஆண்டுகளில் பாதியாக குறைக்க புதியயோசனை ஒன்றை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது, லாரிகளில் ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் விபத்துக்கள் குறையும் என்பது மத்திய அரசின் எதிர்பார்ப்பு.

இதுபற்றி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்ததாவது:-

நெருக்கடி காரணமாக ஏற்படும் விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ் சாலைகளின் நீளம் 96 ஆயிரம் கிலோ மீட்டர்களில் இருந்து 2 லட்சம் கிலோ மீட்டர்களாக அதிகரிக்கபடும். 2014-ம் ஆண்டில்மட்டும் 1,39,671 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந் துள்ளனர். இதற்கு பெரும்பாலும் சாலை வடிவமைப்புகளில் உள்ள குறைபாடே காரணமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் சாலை விபத்துக்களில் நிகழும் உயிரிழப் புகளை பாதியாக குறைக்க தீவிர நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும். நாடுமுழுவதும் 726 பிளாக்ஸ்பாட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த அபாயப்பகுதிகள் அனைத்தும் ரூ.11 ஆயிரம் கோடி செலவில் பாதுகாப்பானவையாக மேம்படுத்தப்படும். 2 லேன்கள்கொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் 4 லேன்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நெடுஞ்சாலைகளில் அதிகளவில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலும் லாரிகளை ஓட்டும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக வியர்வை மழையில் நனைந்து தனது ஒருநிலையை இழக்கும்நிலைக்கு தள்ளப்பட்டு ஓட்டுனர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். மாறாக, ஏ.சி. கேபின்களை கட்டாய மாக்கினால் ஓட்டுனர்களால் 12 மணிநேரம் வரை எவ்வித அயர்ச்சியும் இன்றி லாரிகளை ஓட்டமுடியும். இது விபத்துக்களையும் கணிசமாக குறைக்கும் என்று  அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply